அஜீத் நடித்த பில்லா பட இயக்குனரின் இந்தி படம் ரிலீஸ் தேதி..

Advertisement

தென்னிந்திய சினிமாவில் ஸ்டைலீஷ் இயக்குநர் எனப் புகழ்பெற்றவர் இயக்குநர் விஷ்ணுவர்தன். அஜீத் நடித்த பில்லா படத்தை இயக்கி அதை வெற்றிப்படமாக்கினார். அறிந்தும் அறியாமலும். பட்டியல், சர்வம் போன்ற படங்களை இயக்கியவர் கடைசியாகக் கடந்த 2019ம் ஆண்டு ஃப்ங்கர் டிப் என்ற வெப் சீரிஸை இயக்கினார். இதையடுத்து பாலிவுட்டில் கால்பதித்தார். “ஷெர்ஷா” படம் மூலம் இந்தியில் அறிமுகமாகி உள்ளார். கார்கில் போரில் கலந்து கொண்டு பரம் வீர் சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் விக்ரம் பத்ராவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இத்திரைப் படம் உருவாகியுள்ளது.

இதில் சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். கொரோனா பொது முடக்கத்தால் மற்ற பெரிய படங்கள் போலவே 2020 ஆம் ஆண்டிலிருந்து இப்படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ஆண்டு ஜூலை 2ம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகுமென அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தர்மா புரடக்‌ஷன்ஸ் (Dharma Productions) சார்பில் கரண் ஜோகர் இப்படத்தினை தயாரிக்க, காஷ் எணடர் டெயின்மெண்ட் ( Kash Entertainment) நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்தியா மற்றும் உலகின் பல நாடுகளில் மிகப்பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் இப்படம் வெளியிடப்படவுள்ளது.ஷெர்ஷா படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி , ஜாவித் ஜாப்ரி, ஷிவ் பண்டிட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கமல்ஜேத் நேகி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சண்டிகர், பலம்புர், கார்கில் லடாக், காஷ்மீர் பகுதிகளில் இதன் படப் பிடிப்பு நடந்துள்ளது.

முன்னதாக இப்படத்துக்கு மேராதில் மாங்கே மோர் என பெயரிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது ஆனால் பிறகு ஷெர்ஷா டைட்டில் உறுதி செய்யப்பட்டது.இந்தி படத்துக்குப் பிறகு விஷ்ணுவர்தன் தமிழ், தெலுங்கில் படம் இயக்க பேச்சு நடத்தி வருகிறார். அதேசமயம அஜீத் நடிக்கும் படம் இயக்கவும் அவர் முயன்று வருவதாகத் தகவல் உள்ளது. ஆனால் அதுபற்றி உறுதியான தகவல் எதுவும் வரவில்லை.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>