வாட்ஸ்அப் செயலி, தனியுரிமையில் மாற்றம் செய்வதாக அறிவித்ததும் பலர் மாற்று செய்தி பகிர்வு செயலிகளைப் பயன்படுத்தத் தொடங்கினர். பயனர்கள் பலர் மாற ஆரம்பித்ததும், வாட்ஸ்அப் திருத்தப்பட்ட தனியுரிமை கொள்கையை நடைமுறைப்படுத்துவதைத் தள்ளிவைத்தது. பயனர்களின் தரவுகளை ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு அளிக்க இருப்பதாகவும், வணிக நிறுவனங்களுடன் பகிர இருப்பதாகவும் செய்தி பரவியதையடுத்து பல பயனர்கள் டெலிகிராம், சிக்னல் போன்ற மாற்றுச் செயலிகளைப் பயன்படுத்தத் தொடங்கினர். திருத்தப்பட்ட தனியுரிமை கொள்கையைச் செயலிக்குள்ளே பார்க்கும் வசதியையும் வாட்ஸ்அப் கொண்டு வருகிறது.
திருத்தப்பட்ட தனியுரிமை கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாத பயனர்கள் மே 15ம் தேதிக்குப் பிறகு வாட்ஸ்அப் கணக்கை பயன்படுத்த இயலாது. வாட்ஸ்அப்பை தொடர்ந்து பயன்படுத்தவேண்டுமானால் திருத்தப்பட்ட புதிய தனியுரிமையை கொள்கையை ஏற்றுக்கொள்ளவேண்டும்.தனியுரிமையை கொள்கையைப் பயனர் ஏற்றுக்கொள்வதால் எந்த கூடுதல் தகவலையும் வாட்ஸ்அப் ஃபேஸ்புக்குக்கு வழங்க இயலாது.வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் தொடர்பு விவரங்களை எந்த வணிக நிறுவனங்களுக்கும் வழங்காது. வணிக நிறுவனங்கள் பயனர்களின் ஒப்புதல் இல்லாமல் அவர்களைத் தொடர்பு கொள்ள இயலாது.
வணிக நிறுவனத்திடம் உங்கள் மொபைல் எண்ணை வழங்குவது உங்கள் விருப்பத்தைப் பொறுத்தது. எந்த வணிக நிறுவனத்தையும் (பிசினஸ்) உங்களோடு தொடர்பு கொள்ள இயலாமல் தடுக்க (பிளாக்) இயலும். வணிக நிறுவனங்களோடு நீங்கள் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டால் மின்னஞ்சல் அல்லது தொலைப்பேசி மூலம் தொடர்பு கொள்வதைக் காட்டிலும் விரைவாக அதைச் செய்ய இயலும். ஆனாலும், நீங்கள் விரும்பினால் மட்டுமே வணிக நிறுவனங்களோடு தொடர்பு கொள்ளலாம். வாட்ஸ்அப் பயனர் தொடர்பு எண்ணை எந்த வணிக நிறுவனத்திற்கும் அளிப்பதில்லை.ஃபேஸ்பும் மற்றும் இன்ஸ்டாகிராமில் வணிக நிறுவனங்களின் விளம்பரங்களைப் பார்க்கும் பயனர்கள், அந்நிறுவனங்களோடு வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ள உரியப் பொத்தானை அழுத்தலாம். மற்ற எந்த விளம்பரங்களையும் போன்றே இவ்விளம்பரங்களும் ஃபேஸ்புக்கில் நீங்கள் பார்ப்பவற்றின் அடிப்படையிலேயே உங்களுக்குக் காண்பிக்கப்படும். இவ்விளம்பரங்கள் மூலம் நீங்கள் வணிக நிறுவனங்களைத் தொடர்பு கொண்டால், ஃபேஸ்புக்கோ, வாட்ஸ்அப்போ நீங்கள் பகிர்ந்துகொள்ளும் தகவலைப் பார்க்க இயலாது.பயனர் விரும்பும் எந்த வணிக நிறுவனத்தையும் தங்களிடம் தொடர்பு கொள்ளாமல் தடுக்க (பிளாக்) இயலும் என்று வாட்ஸ்அப் விளக்கமளித்துள்ளது.