திருச்சிக்காரர் தயாரித்த ஹாலிவுட் படம் தமிழில் ரிலீஸ்..

Advertisement

ஹாலிவுட் திரைப்படமான தி மார்க்ஸ்மேன், ஆங்கிலம், தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் டெல் கணேசனின் கைபா ஃபிலிம்ஸால் வெளியிடப்படுகிறது.கைபா இன்க் நிறுவனத்தின் தலைவரான திருச்சியைச் சேர்ந்த தமிழர் டெல் கே கணேசன், முகா என்னும் காணொலி முறையை அறிமுகப்படுத்தியதன் மூலம் உலகத்தின் கவனத்தை ஈர்த்தவர். மேலும், டெவில்ஸ் நைட் மற்றும் கிறிஸ்துமஸ் கூப்பன் போன்ற ஆங்கில திரைப்படங்களைத் தயாரித்து நெப்போலியனை ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்தியவரும் இவரே.

தற்போது இவர், உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஹாலிவுட் திரைப்படமான லியாம் நீசனின் தி மார்க்ஸ் மேன்-ஐ ஆங்கிலம், தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியிடுகிறார்.செலிப்ரிட்டி ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் யூ எஃப் ஓ மூவிஸுடன் இணைந்து டெல் கணேசனின் கைபா ஃபிலிம்ஸ் தி மார்க்ஸ்மேன்- பிப்ரவரி 26 அன்று இந்தியாவில் வெளியிடுகிறது.

ராபர்ட் லோரென்ஸ் இயக்கியுள்ள இத்திரைப்படம், பண்ணை உரிமையாளரான 60-வயது லியாம் நீசன், தாயை இழந்த 11 வயது சிறுவனை மெக்சிகோவின் போதை மருந்து கும்பலிடம் இருந்து எப்படிக் காக்கிறார் என்பதை விறுவிறுப்பான முறையில் அதிரடியாக விவரிக்கிறது.திரைப்படத்தை இந்தியாவில் வெளியிடுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த தயாரிப்பாளர்கள் டெல் கணேசன் மற்றும் ஜி பி திமோதியோஸ், “இந்திய ரசிகர்கள் இப்படத்தை ஆவலாக எதிர்பார்த்து வருகின்றனர். அவர்களுக்காக அவர்களின் மொழிகளிலேயே தி மார்க்ஸ்மேன்-ஐ நாங்கள் வெளியிடவிருக்கிறோம். இது ஒரு மிகச் சிறந்த திரைப்படம் என்பதால், மொழிகளைக் கடந்து ரசிகர்கள் பெரியளவில் ஆதரவு தருவார்கள் என நம்புகிறோம்,” என்றனர்.கைபா ஃபிலிம்ஸின் அஷ்வின் டி கணேசன் (தி ஏடிஜி) கூறுகையில், “தனது முந்தைய படங்களின் வெற்றியின் காரணமாக லியாம் நீசன் உலகெங்கும் ரசிகர்களின் மனங்களை வென்றுள்ளார். அவரது புதிய திரைப்படத்தை இந்திய ரசிகர்களுக்கு விருந்தாக படைப்பதற்கு மகிழ்ச்சி அடைகிறோம்,” என்றார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>