பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்ற பிரபல நடிகை ஓவியா. ஆரவை காதலித்து காதல் தோல்வி ஏற்பட்டதால் நீச்சல் குளத்தில் மூழ்கி தற்கொலைக்கு முயன்று பிறகு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியில் வந்தார். அதன்பிறகு ஓவியாவுக்கு ஓவியா ஆர்மி என்ற ரசிகர்கள் கூட்டம் உருவானது. ஓவியாவின் செயல்களுக்கு இந்த ஆர்மி துணையாக இருந்து வருகிறது. இதுவரை ஓவியா அரசியல் பற்றி கருத்து பகிர்ந்ததில்லை. சமீபத்தில் திடீரென்று தனது இணைய தள டிவிட்டர் பக்கத்தில் அரசியல் அதிரடி கிளப்பி பலரையும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தினார்.
கடந்த வாரம் பிரதமர் மோடி தமிழகம் வந்தார். அவர் வருகையை எதிர்க்கும் வகையில் தனது ஓவியா டிவிட்டர் பக்கத்தில் கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக் பகிர்ந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.பிரதமர் மோடி தமிழகம் வந்து விழாவில் பங்கேற்றுவிட்டு மீண்டும் டெல்லி புறப்பட்டுச் சென்றார். ஆனால் ஓவியா திடீரென்று மோடிக்கு எதிராக இப்படியொரு ஹேஷ் டேக் போட்டது அவர் அரசியலில் ஈடுபட மேற்கொண்டுள்ள முடிவா? அல்லது யாராவது அவரது டிவிட்டர் கணக்கை ஹேக் செய்து இப்படி போட்டிருக்கிறார்களா என்ற சலசலப்பு எழுந்தது. அவரது ரசிகர்கள் இந்த டிவிட்டை வைரலாக்கினர்.
இந்நிலையில் நடிகை ஓவியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாஜக வக்கீல் அணியினர், சென்னை போலீசில் புகார் அளித்தனர். ஓவியாவின் டுவிட்டர் கணக்கை முடக்க வேண்டும் என அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்நிலையில் ஓவியா தனது டிவிட்டர் மெசேஜுக்கு பதில் அளிக்கும் விதமாக ஜெய் ஹிந்த் கருத்துச் சுதந்திரம் என மெசேஜ் பகிர்ந்திருக்கிறார். மோடிக்கு எதிராக டிவிட் மெசேஜ் போட்டதை அவர் மறுக்கவில்லை மாறாக அதனை உறுதி செய்யும் விதத்தில் கருத்துச் சுதந்திரம் இருப்பதாக அவர் தெரிவித்திருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓவியாவின் இந்த மெசேஜையும் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.ஓவியா தற்போது தமிழில் ராஜபீமா, பிளாக் காஃபி, சம்பவம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.