ஏலியன் ஆகும் இளம் ஹீரோ..

by Chandru, Feb 22, 2021, 10:06 AM IST

ஹாலிவுட் படங்களில் ஏலியன் அதாவது வேற்று கிரக மனிதன் கதைகள் அவ்வப்போது வருகிறது. இந்தியில் கடந்த 2014ம் ஆண்டு ஆமிர்கான் நடித்த பி கே என்ற படம் வேற்று கிரக வாசி படமாக வந்தது. இப்படம் வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்றது.இந்தியில் வெளியான 3 இடியட்ஸ் படத்திற்குப் பிறகு அமீர்கான் மற்றும் ராஜ் குமார் ஹிரானி இணைந்து இப்படத்தில் நடித்திருந்தனர். இப்படத்தின் முடிவில், ரன்பீர் கபூர் ஒரு சிறு பாத்திரத்தில் தோன்றினார். கெஸ்ட் ரோலில் அமீர்கானின் நண்பராக வேற்றுக்கிரக மனிதராக ரன்பீர் நடித்தார்.

தற்போதைய தகவல்படி தயாரிப்பாளர் விது வினோத் சோப்ரா, பி.கே படத்தின் 2ம் பாகம் உருவாகவிருப்பதாகத் தெரிவித்துள்ளார். அதற்கான திட்டம் உள்ளது. ஆனால் அது எழுத்தாளர் அபிஜத் ஜோஷைப் பொறுத்தது. அவர் இன்னும் பி கே 2ம் பாகம் ஸ்கிரிப்ட் எழுதவில்லை, அபிஜத் ஜோஷி ஸ்கிரிப்டுடன் வந்தவுடன் படம் தொடங்கும் என்று கூறினார்.2ம் பாகத்தில் ரன்பீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புள்ளது. ரன்பீர்கபூர் அடுத்து பிரம்மாஸ்த்ரா என்ற 3டி படத்தில் நடித்து வருகிறார். மிகவும் எதிர்பார்க்கப்படும். இப்படத்தில் திறமையான அழகு நடிகை அலியா பட் மற்றும் நடிகர் நாகார்ஜுனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

You'r reading ஏலியன் ஆகும் இளம் ஹீரோ.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை