வெங்கடேஷ்-மீனா நடிப்பில் த்ரிஷ்யம்-2.. தமிழில் கமல்ஹாசன் நடிப்பாரா?

Advertisement

மலையாள சூப்பர் ஹிட் திரைப் படமான திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகமான த்ரிஷ்யம்-2 வெளியாகி பெரும் பாராட்டுதல்களை பெற்று வரும் நிலையில், இப்படத்தின் தெலுங்கு பதிப்பு குறித்த சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன.த்ரிஷ்யம் முதல் பாகத்தைத் தெலுங்கில் ரீமேக் செய்த அதே குழு, இரண்டாம் பாகத்தின் ரீமேக்குக்கும் தயாராகிறது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில், வெங்கடேஷ், மீனா, நதியா, நரேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். த்ரிஷ்யம் திரைப்படங்களை மலையாளத்தில் இயக்கியதும் ஜீத்து ஜோசப் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் பூஜை மார்ச் 1 அன்று நடைபெறுகிறது. மார்ச் 5 படப்பிடிப்பு தொடங்கித் தொடர்ந்து 50 நாட்கள் நடை பெறுகிறது. தெலுங்கு பதிப்பை ராஜ் குமார் தியேட்டர்ஸ் சார்பில் ராஜ்குமார் சேதுபதி மற்றும் ஸ்ரீ பிரியா, மலையாள தயாரிப்பாளரான அந்தோணி பெரும்பாவூர் மற்றும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான சுரேஷ் பாபு ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.இதற்கிடையே, த்ரிஷ்யம் 2 படத்தின் தமிழ்ப் பதிப்பை ராஜ்குமார் தியேட்டர்ஸ் சார்பில் ராஜ்குமார் சேது பதி ,ஸ்ரீ பிரியா ராஜ்குமார் மற்றும் ஆண்டனி பெரும் பாவுர் ஆகியோர் இணைந்து தயாரிக்க உள்ளனர்.

தமிழ் பதிப்பின் இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.த்ரிஷ்யம் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான பாப நாசம், ஜீத்து ஜோசப் இயக்கத்தில், கமல்ஹாசன் மற்றும் கௌதமி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்றது. த்ரிஷ்யம் 2 படத்தில் கமல்ஹாசன் நடிப்பாரா அல்லது வேறு நடிகர் நடிப்பாரா என்பது பற்றி ஆலோசனை நடைபெற்றுவருகிறது. கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற படத்தில் நடிக்கிறார். மேலும் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சி பணிகளிலும். சட்டமன்ற தேர்தல் பணியிலும் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் அவர் திர்ஷ்யம் 2 படத்தில் நடிப்பது எந்தளவுக்கு உறுதியாகும் என்பது சில நாட்களில் தெரியவரும்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>