பிரபாஸ் படத்தில் நடிக்கிறார் அமிதாப்பச்சன்.. சீனியர் இயக்குனர் படக் குழு கெய்டு ஆகிறார்..

பாகுபலி பிரபாஸ் தற்போது 3 படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். ராதே ஷ்யாம், ஆதிபுருஷ், சலார் ஆகிய படங்களில் அவர் பங்கேற்று நடிக்கிறார். இதில் ராதே ஷ்யாம் படப்பிடிப்பு முடிந்தது. பிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். சலார் படத்தில் பிரபாஸ் ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பும் நடந்து வருகிறது. இந்நிலையில் நாக் அஸ்வின் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார் பிரபாஸ். அப்படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இதில் அமிதாப்பச்சன் பிரதான வேடத்தில் நடிக்க உள்ளார்.

கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி நெட்ஃபிக்ஸ் இல் வெளியான பிட்டா கதலு என்ற ஆந்தாலஜி படத்தின் ஒரு பகுதியாக இயக்குனர் நாக் அஸ்வின் குறும்படம் இடம்பெற்றது. அடுத்து இவர் பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோனே நடிக்கும் படம் இயக்க உள்ளார். அவர் அப்படத்தின் முன் தயாரிப்பு பணிகளில் மும்முரமாக உள்ளார்.அண்மையில் ஒரு ஊடக உரையாடலில், நாக் அஸ்வின், கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாகப் படத்தின் பிரபாஸ் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டதாகவும், இப்போது 2021 நடுப்பகுதியில் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.

நாக் அஸ்வின் கடந்த பிப்ரவரி 26க்குள் தனது வரவிருக்கும் படம் குறித்த புதுப்பிப்பைத் தருவதாக் கூறி இருந்தார். ஆனால் அந்நாளில் எந்த புதுப்பிப்பும் இருக்காது என்று பின்னர் கூறினார். மார்ச் மாதத்தில் பிரபாஸ் படப் பிடிப்பைத் தொடங்கவிருப்பதாக நடிகையர் திலகம் பட இயக்குனர் நாக் அஸ்வின் தெரிவித்திருந்தார். "தொற்றுநோய் பரவல் மற்றும் பிரபாஸின் மற்ற பட கால்ஷீட் காரணமாக ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் மட்டுமே தனது படப்பிடிப்பு தொடங்கும் என்றார்.பிரபாஸுக்காக காத்திருப்பதில் தனக்கு எந்தவிதமான அசவுகரியமும் இல்லை என்று கூறிய நாஸ் அஸ்வின், "ஆதிபுருஷ் ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டது, பிரபாஸ் அதில் ராமராக நடிக்கிறார். அந்தபடம் நாட்டின் எல்லா மூலைகளிலும் சென்றடையும். அப்படத்திற்குப் பிறகு பிரபாஸ் மார்க்கெட் 30 சதவீதம் மேலும் உயரும். அதன்பிறகு அவருடன் ஒரு படத்தில் பணிபுரியச் சிறந்த வாய்ப்பாக நான் கருதுகிறேன். ஆனால் பட தாமதத்திற்கு இதுவே காரணம் அல்ல.

இப்படத்தில் அமிதாப்பச்சனின் பாத்திரம் குறித்துப் பேசிய நாக் அஸ்வின், "பச்சன் சார் தன்னிடம் உள்ள பல படங்களில் எங்கள் படத்தைத் தேர்ந்தெடுத்தது எனக்கு அதிர்ஷ்டம் மற்றும் பாக்கியம் என்று நினைக்கிறேன். இது ஒரு முழு நீளப் பாத்திரமாகும். இன்னும் இப்படத்துக்குப் பெயரிடப்படவில்லை. படத்தை வைஜயந்தி மூவிஸ் தயாரிக்கிறது. மூத்த திரைப்படத் தயாரிப்பாளர் சிங்கீதம் சீனிவாச ராவ் இந்த படக்குழுவின் வழிகாட்டியாக பணியாற்றவுள்ளார்.இவ்வாறு நாக் அஸ்வின் தெரிவித்தார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds

READ MORE ABOUT :