அறிவழகன் - அருண் விஜய் படத்தின் நிலை என்ன?

by Chandru, Feb 23, 2021, 18:14 PM IST

இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் திரை வாழ்வில், மிக முக்கியமான திரைப்படமாக உருவாகி வரும் ஏவி 31 ( AV31 )படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக முடிந்த நிலையில், டப்பிங் பணிகள் சென்னையில் மிக எளிமையான பூஜையுடன் துவங்கப்பட்டது.அருண் விஜய் மற்றும் அறிவழகன் கூட்டணியில் வெளிவந்த மெடிக்கல் திரில்லரான “குற்றம் 23” மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது. இந்த நிலையில் இவர்கள் கூட்டணியில் AV31 அறிவிக்கப்பட்ட நொடியிலிருந்தே, படம் என்னவாக இருக்குமன்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பன்மடங்கு எகிறியுள்ளது.

படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு, படத்தின் இறுதிக் கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் படத்தினை வரும் கோடைக் காலத்தில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீஸர், ட்ரெய்லர், இசை மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அறிவிக்கப்படும்.ஆல் இன் பிக்சர்ஸ் (All in Pictures) சார்பில் ராகவேந்திரா தயாரித்திருக்கும் இப்படம் உளவு சம்பந்தமான திரில்லர் படமாக உருவாகியுள்ளது. ரெஜினா கஸண்ட்ரா நாயகியாக நடிக்க, ஸ்டெஃபி படேல் மற்றும் பகவதி பெருமாள் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். பி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாபு ஜோசப் படத்தொகுப்புப் பணிகளை செய்துள்ளார்.2021 வருடத்தில் அருண் விஜய் சினம், அக்னி சிறகுகள், AV32 என எதிர்பார்ப்பு மிக்க முக்கிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் சில முக்கியமான படங்களின் அறிவிப்பு விரை வில் வெளியாகவுள்ளது.சூர்யா தயாரிப்பில் அருண் விஜய்யின் மகன் அர்னவ் நடித்து வருகிறார், பிறகு அருண்விஜய்யும் இணைந்தார் அவரைத்தொடர்ந்து விஜய குமாரும் நடிக்க ஒப்பந்த மானார். பேரன், தந்தை, தாத்தா என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 தலைமுறையினர் இணைந்து நடிக்கின்றனர்.இது குறித்து இப்பட இயக்குநர் சரவ் சண்முகம் கூறியதாவது:இந்த கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடிப்பாரா எனும் பெரும் சந்தேகத்துடன் தான் முதலில் அவரை அணுகினேன். அவர் இந்தப்படத்தில் அர்னவிற்காக மட்டுமென்றால் நான் நடிக்க மாட்டேன் என முதலிலேயே கூறிவிட்டார்.

நான் திரைக்கதையைக் கூறிய பிறகு அந்த கதாப்பாத்திரம் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. ஒப்பந்தமாவதற்கு முன்னால் தனது கதாபாத்திரம் குறித்து நிறையக் கேட்டுத் தெரிந்து கொண்டார். தற்போது ஊட்டியில் எங்களுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். படம் உருவாகி வரும் விதம் மிகுந்த மகிழ்ச்சியை அளிப்ப தாக உள்ளது. அர்னவ் மிகவும் துறுதுறுப்பான, உற்சாகம் கொண்ட திறன்மிகு நடிகர். இயல்பாகவே அவரிடம் நடிப்பு திறன் நிறைந்திருக்கிறது. இப்படம் மிக அழகாக உருவாகி வருகிறது.குழந்தைகளின் உலகை மைய மாக வைத்து உருவாகும், இன்னும் தலைப்பிடப்படாத இப்படம் நடிகர் அருண் விஜய்யின் 32வது படமாகும்.இப்படம் முழுக்க ஊட்டியில் படமாகிறது. விஜய்குமாரும் இப்படத்தில் இணைந்திருக்கிறார் என்றார்.

You'r reading அறிவழகன் - அருண் விஜய் படத்தின் நிலை என்ன? Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை