விஜயதேவரகொண்டா நடிக்கும் புதிய படம் லைகர். பூரி ஜெகநாத் இயக்குகிறார். சார்மி தயாரிக்கிறார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இடைவிடாமல் நடக்கிறது. படப்பிடிப்பில் விஜய் தேவர கொண்டாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ரம்யா கிருஷ்ணன் வெளியிட்டார். அதில் இருவரும் புன்னகையுடன் இருந்தனர். படப் பிடிப்பு தளம் டென்ஷன் இல்லாத இடம்போல் இருவரும் எண்ணும் அளவுக்கு ஷுட்டிங்கை ஜாலியாக இயக்கிக் கொண்டிருக்கிறார் புரி ஜகநாத், இதனைக் குறிக்கும் வகையில் ரம்யா குறிப்பிடும் போதும்,படப்பிடிப்பு தளத்தில் தான் எங்கள் பணி நடக்கிறது.
ஆனால் பார்ட்டியில் பங்கேற்றது போன்ற உணர்வுடன் ஜாலியாக பணியாற்றி வருகிறோம் என்றார்.இப்படத்தில் விஜயதேவர கொண்டாவின் தாயாக நடிக்கிறார் ரம்யா கிருஷ்ணன். குத்துச் சண்டையை அடிப்படையாகக் கொண்டு படத்தை இயக்கி வருகிறார் பூரி ஜகநாத். குத்து சண்டை வீரராக நடிப்பதற்காக விஜய் தேவர கொண்டா சிக்ஸ் பேக் உடற் கட்டுக்காகக் கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டு மாறினார். இதற்காக பிரத்யேக பயிற்சியாளர் அவருக்கு அமர்த்தப்பட்டார்.
இப்படத்தை சார்மியுடன் இணைந்து கரண் ஜோஹர் மற்றும் சாமர் கவுர் ஆகியோ ரும் தயாரிக்கின்றனர்.லிகர் படத்தில் விஜய் தேவர கொண்டா ஜோடியாக அனன்யா பாண்டே நடிக்கிறார். இப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. தற்போது இதன் படப்பிடிப்பு மும்பையில் நடக்கிறது. சமீபத்தில் படப் பிடிப்பு இடைவேளையில் விஜய தேவரகொண்டாவை நடிகை சார்மி ஸ்கூட்டரில் அழைத்துக்கொண்டு மும்பை வீதிகளில் வலம் வந்தார். இந்த படங்கள் நெட்டில் வைரலானது.