நடிகர் வடிவேலு மீண்டும் நடிக்க வருவது எப்போது? 10 வருடமாக நடிக்கவில்லை..

Advertisement

திரையுலகில் ஒன்றிரண்டு வருடம் ஒரு நடிகர் அல்லது நடிகையின் படம் வராமலிருந்தாலே அவர்களை ரசிகர்களும் இயக்குநர்களும் மறந்து விடுவது வழக்கம். ஆனால் கடந்த பத்து வருடமாக நடிக்காமலிருந்தும் அவரை பற்றிய பேச்சு, மீண்டும் நடிக்க வருவார் என்ற தகவல் வருகிறதென்றதால் அது காமெடி நடிகர் வடிவேலுவைப் பற்றித் தான். அந்தளவுக்குத் தனது நகைச்சுவை நடிப்பு மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.கடந்த பத்து வருடமாக தனக்கு எந்த திரைப்பட வாய்ப்புகளும் கிடைக்க வில்லை என்பதையும், இப்போது 10 ஆண்டுகளாகத் தான் முடக்கப்பட்ட நிலையில் இருப்பதையும் பற்றிப் பேசும்போது, ​​ அவர் உணர்ச்சி வசப்படும் வீடியோவில் சில நாட்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது, 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த வடிவேலு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார்.

தற்போது எம் மகன் படப் புகழ் இயக்குனர் திருமுருகன் இயக்கும் ஒரு படத்திற்காக வடிவேலுவை நடிக்கக் கேட்டிருக்கின்றனர். திருமுருகன் டிவியில் பஞ்சவர்ணக்கிளி, மெட்டி ஓலி மற்றும் இப்போது ஒளிபரப்பாகும் கல்யாண வீடு உள்ளிட்ட பல சீரியல்களை இயக்கியுள்ளார். எம் மகன் படம் மூலம் வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமானார். இதில் பரத் மற்றும் கோபிகா நடிததிருந்தனர். நாசர் வடிவேலு முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

திருமுருகன் தனது படத்திற்காக பல மாதங்களாக வடிவேலுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.படத்தில் மிக முக்கிய பாத்திரமாக அது அமைந்திருக்கிறது. இது ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகவிருக்கிறது. வடிவேலு கதாபாத்திரம் ஸ்கிரிப்ட்டின் முதுகெலும்பாக இருக்கும். இப்படத்தை டி.ஜி. தியாகராஜன் தயாரிக்க உள்ளதாகத் தெரிகிறது. மேலும் அடுத்த சில வாரங்களில் இதுபற்றிய விவரம் உறுதிப் படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வடிவேலு கடைசியாக 2017 ஆம் ஆண்டு வெளியான மெர்சலில் படத்தில் நடித்தார். இருப்பினும் கடந்த 2011க்கு பிறகு அவரது பட வாய்ப்புகள் குறைந்துவிட்டன. 2017 ஆம் ஆண்டில், ஷங்கர் தயாரிப்பில் உருவாகவிருந்த இம்சை அரசன் 24ம் புலிகேசி படப்பிடிப்பில் நடிக்க ஒப்புக் கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடுகள் அதிகரித்ததால் அப்படத்திலிருந்து விலகினார். இப்படம் நிறுத்தப்பட்டது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>