ராஜமவுலி படத்துக்கு நடிகர் கால்ஷீட் பிரச்சனை.. திட்டமிட்டபடி படம் ரிலீஸ் ஆகுமா?

by Chandru, Feb 24, 2021, 09:46 AM IST

பிரபாஸ் நடித்த பாகுபலி படத்துக்குப் பிறகு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி ஆர் ஆர் ஆர் படத்தை இயக்குகிறார். இதில் ராம் சரண். ஜூனியர் என் டி ஆர் இணைந்து நடிக்கின்றனர். அலியாபட் ஹீரோயினாக நடிக்கிறார். அஜய்தேவ்கன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2020ம் ஆண்டே முடிந்திருக்க வேண்டியது கொரோனா ஊரடங்கு காரணமாக சுமார் 10 மாதம் படப்பிடிப்பு நடக்கவில்லை. கடந்த ஆண்டு இறுதியில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. சுமார் 75 நாட்களுக்கும் மேலாகப் படப் பிடிப்பு நடந்தது. ராம் சரண், ஜூனியர் என் டி ஆர், அலியா பட் போன்றவர்கள் கலந்து கொண்டு நடித்தனர்.

இதன் படப்பிடிப்பை மார்ச் மாதம் இறுதிக்குள் முடிக்க ராஜ மவுலி திட்டமிட்டிருந்தார். மேலும் வரும் அக்டோபர் மாதம் 13ம் தேதி தசாரா நாளில் படம் ரிலீஸ் ஆகும் என்றும் அறிவித்திருந்தார். தற்போது மார்ச்சில் படப் பிடிப்பு தொடங்குவதில் சிறு சிக்கல் ஏற்பட்டுள்ளது.சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா படத்தை கொரடாலா சிவா இயக்கி வருகிறார். இதில் ராம் சரணும் நடிக்கிறார். ஆச்சார்யா படத்தின் ரிலீஸ் மே மாதம் 9ம் தேதி என் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் ராம் சரண் நடிக்க வேண்டிய காட்சிகள் பாக்கி உள்ளன. இதனால் அவர் ராஜ மவுலியின் படப்பிடிப்பில் பங்கேற்க முடியாமல் கால்ஷீட் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆச்சார்யா படப் பிடிப்பை முடித்த பிறகே ஆர் ஆர் ஆர் படப்பிடிப்பில் பங்கேற்பதாக ராம் சரண் இயக்குனர் கூறி இருக்கிறார், ஆர் ஆர் ஆர் படத்தில் ராம் சரண் அலியாபட் நடிக்க வேண்டிய 2 பாடல்கள் படமாக்க வேண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ராஜமவுலி தனது படப்பிடிப்பு திட்டத்தை மாற்ற வேண்டிய நிலை உள்ளது. ஜூனியர் என் டி ஆர் நடிக்க வேண்டிய காட்சிகளை ராஜமவுலி இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் ஏப்ரல் மாதத்தில் ராம் சரண் காட்சிகள் படமாகிறது.
ராஜமவுலி தரப்பில் ஏற்கனவே ஆர் ஆர் ஆர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சொன்ன தேதியில் படம் ரிலீஸ் ஆகுமா என்று பேச்சு எழுந்துள்ளது.

You'r reading ராஜமவுலி படத்துக்கு நடிகர் கால்ஷீட் பிரச்சனை.. திட்டமிட்டபடி படம் ரிலீஸ் ஆகுமா? Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை