கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் மூலம் டோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் ராஷ்மிகா. அடுத்து தமிழில் கார்த்தி ஜோடியாகத் தமிழில் சுல்தான் படம் மூலம் அறிமுகமாகிறார். இப்படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் இந்தியிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார்.மிஷ்ன் மஜ்னு படம் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார் ராஷ்மிகா. பாலிவுட்டில் இன்னும் தனக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது, மார்கெட் நிலவரம் என்ன என்பது பற்றி தெரியாத நிலையில் மும்பையில் தங்கி அடுத்த படங்களுக்கான வாய்ப்புகள் பற்றிப் பேசச் சொந்தமாக வீடு வாங்கி இருக்கிறார்.
மேலும் மும்பையில் சுமூகமாக வேலையைத் தொடர முடியுமா என்பதை உறுதிப்படுத்தவே நடிகை இந்த வீட்டை வாங்கியுள்ளாராம்.முன்னதாக அவர் இந்தி படப் பிடிப்புக்காக மும்பை செல்லும்போதெல்லாம் நட்சத்திர ஓட்டலில் தங்கி நடித்து வந்தார். ஆனால் இப்போது அவர் மும்பையில் தனக்காக ஒரு வீட்டை வாங்கியுள்ளார்.மிஷன் மஜ்னு மற்றும் பிற பாலிவுட் திட்டங்களுக்குத் தயாராகி வரும் தெலுங்கு படப்பிடிப்புக்காக அவர் ஐதராபாத் மும்பை என்று மாறி மாறி பறந்துகொண்டிருக்கிறார்.
மும்பை புதிய வீட்டைத் தனது பெங்களூர் இல்லம் போன்ற உணர்வுக்கு மாற்ற இங்கிருந்து சில பிடித்த பொருட்களை எடுத்துச் சென்று வைத்திருக்கிறார். ஓட்டல்களில் தங்கியிருந்தபோது அனுபவித்த தனிமையை தற்போது வாங்கி இருக்கும் வீடு மாற்றிவிடும் என்று நம்புகிறார்.கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் ராஷ்மிகா ஒரு ரேஞ்ச் ரோவரை வாங்கியிருந்தார். அப்போது அந்த மகிழ்ச்சியை ரசிகர்களோடு பகிர்ந்துகொண்டார். தனது திரைப் பயணத்தில் தன்னை ஆதரித்த தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.ராஷ்மிகா தற்போது மிஷன் மஜ்னுவில் சித்தார்த் மல்ஹோத்ரா ஜோடியாக நடிக்கிறார்.
இந்தியாவின் மிகவும் ரகசிய நடவடிக்கையை அடிப்படையாகக் கொண்ட உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இப்படம் உருவாகிறது. 1970 களில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவை என்றென்றும் மாற்றிய முக்கிய நிகழ்வே இதன் சாரம்சம். இப்படத்தை சாந்தனு பாகி இயக்குகிறார்.ராஷ்மிகா அல்லு அர்ஜுனுடன் புஷ்பா என்ற படத்தில் நடித்து வருகிறார். இது தெலுங்கில் உருவானாலும் தற்போது பான் இந்தியா படமாகி மாறி இந்தி, தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் வெளியாகிறது.