`நீ தான் என் ஹீரோ... லவ் யூ பேபி.. டுவிட்டரில் காதல் மழை பொழிந்த சன்னி சேச்சி.. காரணம் இதுதான்!

Advertisement

அமெரிக்காவின் நீலப்பட புகழ் நடிகை இப்போது பாலிவுட்டில் பிசியான நடிகை, உலகம் முழுவதும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர், கடந்த வருடம் கூகுளில் அதிகம் பேரால் தேடப்பட்டவர்கள் பட்டியலில் மோடியை பின்னுக்குத் தள்ளி மெர்சல் காட்டியவர் என சன்னி லியோனை பற்றி கேட்டால் நிறைய சொல்வார்கள். பெரும்பாலும், அவரை கவர்ச்சி நடிகை, நீலப்பட நடிகை என்று கூறுபவர்கள் அதிகம். இந்தப் பெயர் தற்போது அவர் பல்வேறு வேடங்களில் நடிக்க தொடங்கியுளளதை அடுத்து மாறி வருகிறது.

இதற்கிடையே, சன்னி லியோனுக்கு என்று தனி குடும்பம் இருக்கிறது. அவர் டேனியல் வெபர் என்பவரை காதலித்து திருமணம் கொண்டார். இந்த தம்பதி மிக மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஒரு குழந்தை மகாராஷ்ட்ர மாநிலம் லத்தூரைச் சேர்ந்த குழந்தை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். இன்னொரு குழந்தை வாடகை தாய் மூலம் பிரசவிக்க வைத்து வளர்த்து வருகின்றனர்.

இதற்கிடையே, சன்னி லியோன் - டேனியல் வெபர் காதல் தம்பதி நேற்று தங்களது 10வது திருமண நாளை கொண்டாடியுள்ளனர். இதையடுத்து கணவர் டேனியல் வெபருக்கு காதல் ரசம் சொட்ட சொட்ட வாழ்த்து சொல்லியிருக்கிறார் சன்னி. ``நான் நேசிக்கும் மனிதனுக்கு 10ம் ஆண்டு திருமண நாள் வாழ்த்துக்கள். நாம் இறக்கும் நாட்கள் வரை இந்த வாழ்க்கையில் ஒன்றாக நடக்க பிரார்த்திக்கிறேன். நீ தான் என் ராக் ஸ்டார். நீ தான் என் ஹீரோ. லவ் யூ பேபி !!" என்று பதிவிட்டு இருந்தார்.

இதேபோல் டேனியல் வெபர் தனது காதல் குயின் சன்னிக்கு வைர நெக்லஸ் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். இதை அணிந்துகொண்டு வீடியோ வெளியிட்டுள்ள சன்னி, ``திருமணம் முடிந்த 10 ஆண்டுகள் மற்றும் எங்கள் வாழ்க்கையை ஒன்றாகக் கழித்த 13 ஆண்டுகள்!! ஒரு அற்புதமான வாழ்க்கையின் வாக்குறுதியைப் பற்றிய ஒரு உரையாடல், நாம் இன்று இருக்கும் இடத்தில் இருப்போம் என்று யாரவது எப்போதாவது கற்பனை செய்திருக்க கூட மாட்டார்கள். திருமண நாளுக்காக வைரங்களுடன் என்னை பொழிந்த டேனியல் வெபருக்கு மிக்க நன்றி" என்று கூறியுள்ளார். சன்னி சேச்சியின் காதல் பதிவுகளை பார்த்த ரசிகர்கள், அவருக்கு வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>