விளம்பர படங்களில் நடிக்கவே மாட்டேன் - சிவகார்திகேயன் உறுதி

Advertisement

24ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில்  உருவாகியிருக்கும் படம் ‘வேலைக்காரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக சென்னையில் நடைபெற்றது. 

வேலைக்காரன்

நடிகர் சிவகார்த்திகேயன் பேசும் போது, “இந்த படம் சமூக அக்கறை உள்ள படம் என்னுடைய பிற படங்களை போல் காமடி மட்டும் அல்லாமல் மாறுபட்ட படமாக இருக்கும்.  மோகன் விஜய் இயக்கத்தில் வெளியான தனி ஒருவன் படத்தை பார்த்த பின் இப்படி ஒரு படம் செய்ய விரும்பி இயக்குனரிடம் கேட்டு இப்படத்தில் நடித்துள்ளேன். இப்படத்தில் வரும் ஒரு காட்சி தான் இனி நான் விளம்பர படங்களில் நடிக்க கூடாது என்ற முடிவை என்னுள் உருவாக்கியது என்று கூறினார்.

`வேலைக்காரன்' தலைவர் டைட்டில். அதை வைப்பதா? என முதலில் யோசித்தோம். படத்துக்கு பொருத்தமான தலைப்புனு ராஜா சார் சொன்னதால் வைத்தோம். அதை படம் பார்த்தால் உணர்வீர்கள். `வேலைக்காரன்' தலைப்பை கவிதாலயாவிடம் இருந்து வாங்கி தன் படத்துக்கு வைத்திருந்தார் விஜய் வசந்த். இந்த படத்துக்கு கேட்டதும் பெருந்தன்மையோடு கொடுத்தார்.

ஃபகத் பாஸில் இந்த படத்தில் நடித்தது எங்களுக்கு கிடைத்த ஒரு அதிர்ஷ்டம். அவர் ஒரு சர்வதேச நடிகர். அவரின் நடிப்பை பக்கத்தில் இருந்து பார்த்து, ரசித்து, பயந்து நடித்ததால் தான் நானும் ஓரளவுக்கு நடிக்க முடிந்தது.

பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருக்கிறது. இந்த படத்துக்கு கேரவன் கிடையாது, ஒன்றாக அனைவரும் ஒரே இடத்தில் உட்கார்ந்து பேசுவோம். 

9 படம் பொழுதுபோக்குக்கு நடித்தால், ஒரு படம் மக்களுக்கு அறிவை புகட்டும் படமாக இருக்கும். முழுக்க கதையை நம்பி மட்டுமே எடுக்கப்பட்ட படம்” என்றார். 

இதில் ‘வேலைக்காரன்' படக்குழுவினர் மோகன் ராஜா, ஆர்.டி.ராஜா, சிவகார்த்திகேயன், அனிருத், ரோபோ ஷங்கர், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி, காளி வெங்கட், மன்சூர் அலிகான், விஜய் வசந்த், கலை இயக்குனர் முத்துராஜ், ஒளிப்பதிவாளர் ராம்ஜி உள்ளிட்ட பலரும் விழாவில் கலந்து கொண்டு பேசினர்.

Advertisement
மேலும் செய்திகள்
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
alya-manasa-dances-with-vj-prathu-for-top-tucker-song-raja-rani-2
நடிகை ஆல்யா மானசா டாப் டக்கர் டான்ஸ்!
actress-becomes-addict-to-smoking-in-bigg-boss
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் இந்த பழக்கத்துக்கு அடிமையாகி விட்டேன்…! பிரபல நடிகை பகீர்
vikram-and-dhuruv-vikram-new-picture-goes-to-viral
4 நாட்களுக்கு பின் விக்ரமிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய துருவ்
actress-parvati-nair-latest-hot-photos
பிளாக் அண்ட் ஒயிட் சேலையில் கிறங்க வைத்த பார்வதி நாயர்
actor-daniel-has-been-accused-of-sexually-abusing-young-women
இளம் பெண்களிடம் அத்துமீறி பேசும் நடிகர் டேனியல்
en-rasavin-manasile-2-actor-rajkiran-new-statement
என் ராசாவின் மனசிலே-2 படம் குறித்து நடிகர் ராஜ்கிரண் அறிக்கை
two-election-observers-in-tamil-nadu-of-kerala-cadre-have-been-called-back-in-view-of-tainted-background
திருப்பி அனுப்பப்பட்ட தமிழக தேர்தல் பார்வையாளர்கள்
express-train-rolled-backwards-nearly-35-kilometre-in-uttarakhand-state
35 கிலோ மீட்டர் தூரம் பின்னோக்கி ஓடிய ரயில்
customer-accused-that-zomato-delivery-person-had-hit-her
மூக்கில் குத்தி செருப்பால் அடித்து ஒரு ஸொமட்டோ டெலிவரி
/body>