ரஜினி, கமல் திரைப்படத்தை தவிர வேறு தமிழ் திரைப்படங்கள் வெளியாவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என கர்நாடக திரைப்பட வர்த்தக சபயின் தலைவர் சாரா கோவிந்த் தெரிவித்துள்ளார். #Kaala
காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு எதிராக கருத்து தெரிவித்த ரஜினிக்கு அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பெங்களூருவில் உள்ள கர்நாடக திரைப்பட வர்த்தக சபை முன், சில அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
பின்னர் ரஜினியின் படத்தை எக்காரணம் கொண்டும் கர்நாடகாவில் திரையிடக் கூடாது என்பதை வலியுறுத்தி கோரிக்கை மனு ஒன்றையும் திரைப்பட வர்த்தக சபையில் அந்த அமைப்பு வழங்கியது.
மனுவை பெற்றுக் கொண்டு பின்னர் பேசிய கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை தலைவர், ரஜினி, கமல் ஆகியோர் மன்னிப்பே கேட்டாலும், அவர்களது படங்களை இனி கர்நாடகாவில் வெளியிடப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.
திரையரங்கு உரிமையாளர்களும் இதற்கு ஓப்புக்கொண்டதாக அவர் கூறினார். இதனால் ரஜினியின் காலா திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகுவதில் சிக்கல் எழுந்துள்ளது.