இயக்குனர் பாரதிராஜாவுக்கு முன் ஜாமீன்

பாரதிராஜாவுக்கு முன் ஜாமீன்

by Radha, Jul 2, 2018, 22:02 PM IST

திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவுக்கு இரண்டு வழக்குகளில் முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Bharathiraja

கடந்த 12-ஆம் தேதி கோவையில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறு காரணமாக திரைப்பட இயக்குநர் அமீர் மீது கோவை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் அமீருக்கு ஆதரவாக, திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, தேசத்திற்கு விரோதமாகவும், தமிழக அரசை மிரட்டும் விதமாகவும், தமிழக அரசை எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக திருவல்லிக்கேணி காவல் நிலைத்தில், பாரதிராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் ஐபிஎல் போட்டிகளின்போது காவல்துறை தாக்க தூண்டியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த இரண்டு வழக்குகளிலும் முன் ஜாமீன் கோரி இயக்குனர் பாரதிராஜா மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, தினமும் காலை 10.30 மணிக்கு திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் விசாரனை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையோடு பாரதிராஜாவுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

You'r reading இயக்குனர் பாரதிராஜாவுக்கு முன் ஜாமீன் Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை