பிக்பாஸ் 2 டைட்டில் வின்னர் இவர்தான்! கசிந்தது ரகசியம்..

Advertisement

விஜய் டிவியில் நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 2வின் டைட்டில் வின்னர் ரித்விகா என்ற தகவல் கசிந்துள்ளது. மேலும், ரன்னர்-அப் டைட்டிலை ஐஸ்வர்யா வென்றுள்ளார்.

பிக்பாஸ் முதல் சீசன் மாபெரும் வெற்றியை பெற்றதை தொடர்ந்து, அதன் இரண்டாவது சீசனையும், கமல் தொகுத்து வழங்கினார். கடந்த சீசனை விட, பல இளசுகளை இந்த சீசனில் பிக்பாஸ் இறக்கியும், மக்களின் கவனத்தை அவர்கள் பெரிதாக கவரவில்லை. நல்லவர் யார்? கெட்டவர் யார்? என்ற கான்செப்டில் உருவான பிக்பாஸ் 2வில் அனைவருமே சுயநலவாதிகளாகவே தெரிந்தனர். இதில், மகத், யஷிகா, மும்தாஜ், ஐஸ்வர்யா சிறப்பாக நடித்து தங்களது ஆட்டத்தை ஆடினர்.

புது வரவுகள் யாராவது வருவார்களா? என்று பார்த்த மக்களுக்கும் விஜயலட்சுமியை தவிர வேறு யாருமே வராதது ஏமாற்றத்தையே அளித்தது. பிக்பாஸ் வீடா? ஐயோ நான் வரலப்பா என்றே திரைப் பிரபலங்கள் அலறி ஓடுகின்றனர் என்ற தகவலும் வெளியானது.

பிக்பாஸ் 2 எதற்கு பயன்பட்டதோ இல்லையோ, கமலுக்கு அரசியல் பிரச்சாரத்திற்கு பயன்பட்டது. மேலும், பல சினிமாக்களுக்கும் புரொமோஷன் செய்து தரும் வேலையை பிக்பாஸ் செய்தது.

இந்நிலையில், நிகழ்ச்சியை ஓட்ட வேண்டும் என்று எண்ணி, போன சீசன் ஆட்களை மீண்டும் வீட்டிற்குள் அனுப்பி, ஷோவை நகர்த்தினர். 100 நாட்கள் என தொடங்கிய ஷோ, 108 நாட்களாக மாறியது.

இன்று மற்றும் நாளையுடன் இந்த ஷோ முடிவு பெறுகிறது. இதன் படப்பிடிப்புகள் நேற்றே முடிந்து விட்ட நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐஸ்வர்யா டைட்டில் வின்னராக தேர்வாகமால், ரித்விகாவை பிக்பாஸ் டைட்டில் வின்னராக அறிவித்தார். ரன்னராக ஐஸ்வர்யாவை அறிவித்தார்.

இன்று இரவு ஒளிபரப்பாகவுள்ள ஷோவில், ஜனனியை எலிமினேட் செய்கின்றார் கமல். இப்படி ஷோ வெளியாகும் முன்னே ரசிகர்களால் ரகசியம் லீக்கானதை கண்டு பிக்பாஸ் டீம் அதிர்ச்சியில் உள்ளது.

அடுத்த பிக்பாஸ் சீசன் வருமா என்பதும், அப்படி வந்தால், மீண்டும் கமல் தொகுத்து வழங்குவாரா என்பதும் மில்லியன் டாலர் கேள்விகள்..

 

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>