தேனியில் பாலியல் வண்புணர்வுக்கு ஆளான 11 வயது சிறுமி தற்கொலை செய்த அதிச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரும் இவரது மனைவியும் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். முதல் மகள் திருமணமாகி கணவர் வீட்டில் வசித்து வருகிறார்.
இரண்டாவது மகள் ராகவி வயது 11, 7ஆம் வகுப்பும் மூன்றாவது மகள் ஐந்தாம் வகுப்பும் படித்து வருகின்றனர். தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை என்பதால் சிறுமிகள் இருவரும் வீட்டில் இருந்துள்ளனர். பெற்றொர்கள் இருவரும் குழந்தைகளுக்கு சமைத்து வைத்துவிட்டு கூலி வேலைக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் தான் சம்பவத்தன்று மர்ம நபர் ஒருவன் சிறுமி ராகவியின் வீட்டுக்குள் புகுந்து அவளை பாலியல் வன்புணர்வு செய்து கொடுமைப் படுத்தியுள்ளான். இன்னும் வயதுக்கு கூட வராத அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடூரத்தை நினைத்து மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாள்.
இந்த விவகாரம் வேலைக்குச் சென்ற பெற்றொர்களுக்கு தெரியவர இருவரும் பதறியடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்து பார்த்தனர். அப்போது தங்கள் மகள் தூக்கில் தொங்கியதைக் கண்டு இருவரும் தாங்கமுடியாமல் கதறியழுதனர். இந்நிலையில், தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி சிறுமியின் உடலை வாங்க மறுத்து பெற்றொர்கள் போராட்டம் நடத்தினர். பின்னர் போலீசாரின் கெடுபிடியால் ஒருவழியாக சிறுமியின் உடல் பெற்றொரிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதி மரியாதை செய்யப்பட்டது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றொர் கூறுகையில் நாங்க காம்பவுண்டு வீட்டுல குடியிருக்கோம். எங்க ஹவுஸ் ஓனருடைய பையன் தினசரி மது அருந்திவிட்டு எங்க வீட்டுப் பக்கத்திலேயே சுத்திட்டு இருப்பான். அவன் மேலதான் எங்களுக்கு சந்தேகம் இருக்கு. அதுமட்டும் இல்ல என் பொன்னு இறந்தப்ப அவளோட கால்ல காம்பஸ் வைச்சு குத்தின காயம் இருக்கு உதடு வீங்கிப்போய் இருந்தது. கேட்டா எறும்பு கடிச்சதா சொல்றாங்க. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்டைகூட காட்ட மாட்டுகிறாங்க என்றும் கடுமையாக குற்றம் சாட்டினார்.
மேலும் என் குழந்தையின் இந்த நிலைமைக்கு காரணமானவர்கள் மீது கடுமையான தண்டனை எடுக்க வேண்டும் என்றும் ராகவியின் தாய் கூறியுள்ளார்.