சுவையான தேங்காய் சாதம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருள்கள்:
- பச்சரிசி - 2கப்
- தேஙகாய் - 1மூடி
- உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
- கடலைபருப்பு - 1ஸ்பூன்
- காய்ந்த மளகாய் - 2
- கடுகு - 1 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் ,உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- தேங்காயை துருவி வைத்து கொள்ளவும். சாதத்தை முக்கால் பாகம் வெந்ததும் வடித்து கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு,கடலைபருப்பு,காய்ந்த மிளகாய் போட்டு வதக்கி ஆறவைத்த சாதம், உப்பு,தேங்காய் சேர்த்து நன்கு கிளரி இறக்கவும். சுவையான தேங்காய் சாதம் ரெடி.