ஐஸ்வர்யா ராஜேஷ் காட்டில் மழை !

தமிழில் ஏகப்பட்ட படங்களில் நாயகி, குணசித்திர வேடமென கலக்கி வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

கிரந்தி மாதவ் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகியுள்ள நிலையில், அந்த படத்தின் பூஜை ஆயுத பூஜையான நேற்று போடப்பட்டது.

செக்கச்சிவந்த வானம் படத்தை தொடர்ந்து, வடசென்னை படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷின் தைரியமான கதாபாத்திரத்திற்கு பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன.

இந்த நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கில் அறிமுகமாகும் படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. விஜய் தேவரகொண்டாவுடன் எடுத்த செல்ஃபியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஐஸ்வர்யா, விஜய் தேவரகொண்டாவுடன் எனது முதல் தெலுங்கு படத்தின் பூஜை நடைபெற்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிக்கும் இந்த படத்தை கிரந்தி மாதவ் இயக்குகிறார். இந்தப் படத்தில் ராஷி கண்ணா மற்றொரு கதாநாயகியாக நடிக்கிறார். வழக்கமான கதாநாயகி கதாபாத்திரமாக அல்லாமல் நடிப்பதற்குச் சவாலான வித்தியாசமான கதாபாத்திரம் ஐஸ்வர்யாவுக்கு தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நோட்டா மூலம் விஜய் தேவரகொண்டா தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார். அதுமட்டுமின்றி ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷி கண்ணா என இரு நாயகிகளுமே தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்களாக இருப்பதால் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படம் உருவாக உள்ளது.

கோலிவுட்டில் கலக்கி வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், இனி இரு மாநிலங்களிலும் அசத்தவுள்ளார்.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்