பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை கூறும் இடமாக மாறியுள்ள மீ டூவை ஃபேஷன் ஸ்டேட்மென்டாக மாற்ற வேண்டாம் என ஜனனி கூறியுள்ளார்.
’மீ டூ என்பது உண்மையிலேயே பெண்களுக்குத் தேவையான நல்லவிஷயம்தான். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் ஒருவிஷயம், இந்த மீ டூ என்பது ஏதோ சினிமாத்துறையில் மட்டுமே இருக்கிறது, சினிமாத்துறையில் மட்டுமே பாலியல் அத்துமீறல்கள் நடக்கின்றன என்று நினைக்காதீர்கள். எல்லாத் துறைகளிலும் எல்லா இடங்களிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் நடக்கின்றன என்பதுதான் உண்மை.
இன்னும் நிறைய பெண்கள், தங்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளைத் தைரியமாகச் சொல்ல முன்வரவேண்டும். அதேசமயம், வெறும் பரபரப்பு நியூஸ் கிளப்புவதற்காகவோ பிடிக்காதவர்களை மாட்டிவிடுவதற்காகவோ, சென்சேஷனலை உருவாக்குவதற்காகவோ இந்த மீ டூவை தயவுசெய்து பயன்படுத்தாதீர்கள்.
இன்னொரு விஷயம் ஆறு மாதம் கழித்து சொல்வது, ஆறு வருடங்கள் கழித்து சொல்வது என்றெல்லாம் இல்லாமல், உங்களுக்குத் தொல்லை கொடுத்த உடனே சொல்லுங்கள். சம்பந்தப்பட்டவர்கள் மீது தைரியமாக புகார் கொடுங்கள்’ என பிக்பாஸ் புகழ் ஜனனி தெரிவித்துள்ளார்.
முன்னதாக யஷிகா தனது தாயார் மூலம் தன்னை பாலியல் இச்சைக்காக ஒருவர் அழைத்ததாக தெரிவித்திருந்த நிலையில், ஜனனி இவ்வாறு தெரிவித்திருப்பது இருவருக்குள்ளும் ஏதோ பிரச்சனை என்பதை தெளிவு படுத்துகிறது.