என் பெயரை வெறுத்தேன் மனம் திறந்த ஏ.ஆர்.ரஹ்மான்!

Advertisement

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது தந்தையின் இறப்புக்கு பின் 25 வயது வரை அனுதினமும் தற்கொலை செய்துகொள்ள நினைத்திருந்ததாகவும், தனது உண்மையான பெயரான திலீப்குமார் என்பதை வெறுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் “Notes of a Dream: The Authorized Biography of AR Rahman” என்ற பெயரில் ரஹ்மான் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டு விழா மும்பையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது வாழ்க்கையில் நடந்த பல்வேறு நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டார். அவர் பேசுகையில்,

இந்த உலகம் ஏ.ஆர். ரஹ்மான் என அங்கீகரிக்கும் முன் அனுதினமும் தற்கொலை செய்துகொள்ளும் நினைவுகளால் சூழ்ந்திருந்தேன். எனது 25 வயது வரை எனக்குள் இருந்த தற்கொலை எண்ணம் என்னை வெகுவாக வாட்டி வதைத்தது.

அடிக்கடி பலரும் தன்னிடம் தனித்தன்மை ஏதும் இல்லை என்று நினைக்கிறோம். அந்த காலகட்டத்தில் என் தந்தையை இழந்திருந்ததால் நானும் அப்படி உணர்ந்திருக்கிறேன்.

அந்த காலகட்டத்தில் பல்வேறு விரும்பந்தகாத நிகழ்ச்சிகள் அரங்கேறின. இது எனக்கு ஒரு விதத்தில் தைரியத்தையும், துணிவையும் ஏற்படுத்தியது.

மரணம் அனைவருக்கும் பொதுவானது, உறுதியானதும் கூட, எல்லாவற்றுக்கும் முடிவு என்று ஒன்று இருக்கும்போது எதற்காக அச்சப்பட வேண்டும்?

சென்னையில் பஞ்சதன் ரெக்கார்ட் இன் என்ற ரெக்கார்டிங் ஸ்டுடியோவை கட்டியபிறகுதான் என் வாழ்வில் திருப்புமுனை ஏற்பட்டது. அதற்கு முன்பு வரை செயலற்றவனகாத்தான் இருந்தேன். 

என் தந்தையின் இழப்பால், நான் அதிக திரைப்படங்களில் வேலை செய்வதைத் தவிர்த்துவந்தேன். எனக்கு அப்போது 35 திரைப்படங்கள் கிடைத்த போதிலும் என்னால் இரண்டை மட்டுமே தேர்வு செய்ய முடிந்தது.

தொடர்ந்து, என் 12-22 வயதிற்குள் எல்லாம் செய்து முடித்துவிட்டேன். எனது இயற் பெயரான திலீப்குமார் என்ற பெயரை வெறுத்தேன்; அது எனக்குப் பிடிக்கவில்லை. ஏன் அதை வெறுத்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இது தனக்கு சரியாக பொருந்தவில்லை என்பது மட்டும் புரிந்தது. நான் வேறு ஒருவனாக மாற ஆசைப்பட்டேன் என்றார். 

தொடர்ந்து புதிதாக எதையாவது செய்யவேண்டும் என்பதில் எனக்கு எப்போதும் சலிப்புதட்டியதே இல்லை. ஒரு வேலை இது போல் உணரும் சமயம் பயணம் செய்ய வேண்டும்; குடும்பத்துடன் நேரத்தைச் செலவழிக்கவேண்டும் என எண்ணியதுண்டு. பெரும்பாலான நேரங்களில் அதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதுவே அழகானது தனக்கு மிகவும் உதவுவதாக கூறினார்.

ஏ.ஆர். ரஹ்மான் சென்னையில், 1966 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி பிறந்தார். இவருடைய இயற்பெயர் திலீப்குமார். தந்தை பெயர் சேகர். மலையாள இசைத் துறையில் பணியாற்றி வந்தார்.

ஏ.ஆர். ரஹ்மான், தன் இளம் வயதிலேயே தந்தையை இழந்ததால், தன்னுடைய குடும்ப சூழ்நிலைக் காரணமாக தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு, அதன் வருவாயில் இசை கற்க ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>