சச்சினின் சாதனைகளை முறியடிக்க உலகளவில் கிரிக்கெட் வீரர்கள் முயன்று தோற்ற கதைகள் பல உள்ளன. அந்த ஜாம்பவானின் சாதனைகளை இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் முறியடிப்பதையே தான் சச்சினும் விரும்பினார்.
சச்சினின் பல சாதனைகளை அசுர வேகத்தில் முறியடித்து புதிய சாதனைகளை உலகிற்கு சவால் விட்டுக் கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியின் 30வது பிறந்த தினம் இன்று.
கிரிக்கெட் வெறித்தனம் கிரிக்கெட் தான் தனது உயிர் என ஆக்ரோஷமாக விளையாடும் கோலி, பெவிலியனில் இருக்கும் வரை எதிரி நாட்டு வீரர்களுக்கு அவர் சிம்ம சொப்பனம் தான்.
30 வயதில் எண்ணற்ற சாதனை கோப்பைகளை இந்தியாவுக்காக தூக்கி சுமந்து கொண்டு இருக்கிறார். அமைதிக்கு பெயர் போன தோனியின் இடத்தை தனது கிரிக்கெட் வெறியாலே வென்றார். இந்தியாவின் ரன் மெஷின் என்ற புதிய பட்டத்தையும் கோலி பெற்றுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர், இந்திய இளம் அணியின் கேப்டனாக இருந்து உலக கோப்பையை கோலி வாங்கி தந்து இந்திய அணியில் திறமையின் அடிப்படையில் இடம்பிடித்தவர்.
10,000 ரன்களை கடந்த இந்தியாவின் 5வது வீரர் என்ற பெருமையையும் உலக அளவில் 19வது வீரர் என்ற மைல் கல்லையும் கோலி பெற்றுள்ளார். நேற்றைய டி20 போட்டியில் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. பிறந்த நாளை தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் கொண்டாடி மகிழ்ந்தார்.
சமூக வலைதளங்களில் கோலியின் பிறந்த நாள் செய்திதான் இன்றையட் டிரெண்டிங்கில் அதிக இடங்களை பெற்றுள்ளது. உலக கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் கோலிக்கு வாழ்த்துகளை குவித்து வருகின்றனர். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலக கோப்பையை கோலி இந்தியாவுக்காக வாங்கி தருவார் என்ற நம்பிக்கை இந்தியாவின் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்கள் மனதிலும் உள்ளது. மேலும், மேலும், இந்திய அணிக்காக இந்த ரன் மெஷின் ரன்களை குவிக்கட்டும்!