மெர்சல் படத்துக்குப் பப்ளிசிட்டி படகுழுவை விட அதிகமாக தமிழிசையால் தான் அதிகம் கிடைத்து என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இன்று மீண்டும் விஜயின் சர்கார் படத்திற்கு எதிராக தமிழிசை பேட்டி அளித்திருப்பது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சி அடையசெய்துள்ளது.
அவர் கூறியதாவது "இன்று பல நடிகர்கள் முதல்வர் பதவி ஆசையோடுதான் நடிக்க வருகிறார்கள், ஆனால் அவர்களின் கனவு திரையில் மட்டுமே நடக்கும், சினிமாவில் மட்டும் தான் முதல்வராக நடிக்கமுடியும், கள்ளக்கதையை வைத்து கள்ள ஓட்டைப்பற்றி படம் எடுக்கிறார்கள், இது காப்பரேட்கள் காலம் அல்ல காமன்மேன்களின் காலம்" என்று கூறினார் மேலும் விஜய்க்கு நேர்மையில்லை, அதனை வளர்த்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
வேறு யாரவது விஜய்யை பற்றி இவ்வாறு கூறியிருந்தால் ரசிகர்கள் கோபம் அடைந்து இருப்பார்கள் ஆனால் தமிழிசை என்றதும் தளபதி படத்திற்கான இலவச விளம்பரம் என்று விட்டுவிட்டார்கள்.
இது ஒரு புறம் இருக்க நாளை படம் பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட் புக் செய்து வருகிறார்கள்.
சென்னை கூடுவாஞ்சேரியிலுள்ள திரையரங்கம் ஒன்றில் சர்கார் திரைப்படத்துக்கான டிக்கெட் முன்பதிவின்போது ரசிகர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. நடிகர் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் நாளை வெளியாகிறது. இதனையடுத்து திரையரங்கங்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
கூடுவாஞ்சேரி வெங்கடேஸ்வரா திரையரங்கில் முன்பதிவுக்காக குவிந்த ரசிகர்களுக்கு மத்தியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை அடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் தடியடி நடத்தி ரசிகர்களை கலைத்தனர்.