சென்சாரில் நீக்கப்பட்ட சர்காரின் 5 நொடி காட்சிகள் இவைதான்!

re censor certificate sarkar film:controversy scenes removed from Sarkar

by Manjula, Nov 9, 2018, 15:21 PM IST

அதிமுகவினரின் எதிர்பை தொடர்ந்து சர்கார் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்க தயாரிப்பாளர் தரப்பு சம்மதம் தெரிவித்தது இதனை தொடர்ந்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு இன்று மறு தணிக்கை செய்யப்பட்டு சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. மறுதணிக்கை செய்யப்பட்ட காட்சிகளுடன் படம் மீண்டும் வெளியிடப்படுகிறது.


சர்கார் திரைப்படத்தில் நீக்கப்பட்ட சர்ச்சைக்குரிய காட்சிகள்:

படத்தில் அதிமுக அரசின் இலவச பொருட்களை கொச்சைபடுத்தும் வகையில் காட்சிகள் இருந்தக அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவிதனர் மேலும் ஜெயலலிதாவின் இயர்பெயரான கோமளவல்லி என்ற பெயர் எதிர்மறையாக பயன்படுத்தப்படுவதாக கூரினார்கள். மேலும் விஜய் சிகிரெட் பிடிப்பதற்கும் எதிர்ப்புகள் வந்தது. அங்காங்கே பேனர் கிழிப்பு, விஜய்க்கு எதிராக போரட்டம், பேட்டி என தொடர்ந்த நிலையில் சில இடங்களில் சர்கார் காட்சி நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் சர்கார் படத்தில் சர்ச்சைக்குறிய நீக்கப்பட்ட காட்சிகள்:

இலவச பொருட்களை தீயிட்டு எரிக்கும் 5 நொடி காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது, மேலும் ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமளவல்லில் கோமள என்ற சொல் வரும் இடத்தில் ம்யூட் செய்யப்படும்.

கொசு உற்பத்திக்குக் காரணமான பொதுப்பணித்துறை என்ற வரியில், பொதுப்பணித்துறை ம்யூட் செய்யப்படும் என சென்னை சாஸ்திரி பவனில் உள்ள மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் மண்டல அலுவலர் லீலா மீனாட்சி சான்றிதழ் வழங்கியுள்ளார்.

இந்த விவகாரத்தில் பிரபலங்களின் கருத்துக்கள்:

பாடலாசிரியர் விவேக் தனது ட்விட்டரில் "இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் 19 ஏ பிரிவின்கீழ் உள்ள கருத்து சுதந்திர உரிமையை பகிர்ந்து அத்துடன் எங்கள் குரலை அடக்கினால் கண்டிப்பாக எங்கள் கர்ஜனையை கேட்க நேரிடும் என்று பதிவிட்டுள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் வரலட்சுமி சரத்குமார் கூறியிருப்பட்து:
ஒரு படத்தை பார்த்து பயப்படும் அளவுக்கா அரசு வீக்கா உள்ளது?"

என கோபமாக பதிவிட்டுள்ளார், பார்த்து உங்க ட்விட்டரையும் தணிக்கை செய்து விடுவார்கள்

சர்கார்-க்கு தணிக்கைக்கு எதிராக பலர் எதிர்ப்புகள் தெரிவித்தாலும் அதிமுக அமைச்சர்கள் வரவேறுள்ளார்கள். அமைச்சர் ஓ.எஸ். மணியன் மறுதணிக்கைக்கு சென்றதன் மூலம் சர்கார் படத்தில் கூறிய கருத்துகள் சரியில்லை என்பதை காட்டுகிறது எனக்கூறியுள்ளார்.

அப்போ அந்த சிகிரெட் விளம்பர பிரச்சனை உங்களுக்கு தெரியவில்லையா இளைஞர்கள் படத்தை பார்த்து கெட்டப்பழக்கத்திற்கு அடிமை ஆகா கூடாது என்ற எண்ணம் உங்களுக்கு இல்லையா என்று யாரிடம் கேட்பது தணிக்கை குழுவிடமா இல்லை தமிழக அரசிடமா என்று பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள்.

You'r reading சென்சாரில் நீக்கப்பட்ட சர்காரின் 5 நொடி காட்சிகள் இவைதான்! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை