தமிழ் ராக்கர்ஸ் அட்டூழியம் லைகா நிறுவனம் புலம்பல்!

by Mari S, Nov 29, 2018, 17:08 PM IST

12,500க்கும் மேற்பட்ட இணையதளங்களை முடக்க உத்தரவிட்ட நிலையிலும், தமிழ்ராக்கர்ஸில் 2.0 படம் வெளியாகியுள்ளது.                                                                   

லைகா நிறுவனம் 500 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட படமான 2.0 இன்று வெளியாகி  பாராட்டுக்களை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், முதல் காட்சி முடிந்த சில நிமிடங்களிலேயே தமிழ் ராக்கர்ஸில் 2.0 வெளியாகி தமிழ் திரையுலகிற்கே அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இதனை அறிந்த லைகா நிறுவனம், தனது ட்விட்டர் பக்கத்தில், பல ஆயிரம் மக்களின் உழைப்பு இதில் போடப்பட்டுள்ளது. 500 கோடிக்கும் மேல் பட்ஜெட் செலவிடப்பட்டுள்ளது. சினிமா ரசிகர்கள் பைரசிக்கு ஆதரவு கொடுக்காமல் தியேட்டரில் வந்து இந்த பிரம்மாண்ட 3டி மேஜிக்கை உணர்ந்து ரசியுங்கள் என கோரிக்கை வைத்துள்ளது.

எத்தனை வெப்சைட்டுகளை முடக்கினாலும், தமிழ் ராக்கர்ஸ் புதிய எக்ஸ்டென்சனில் வெளிவருவதை தடுக்க ரியல் சிட்டி வந்தால் தான் முடியும் போல!

Get your business listed on our directory >>More Cinema News

அதிகம் படித்தவை