கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேஜிஎஃப் படத்தில் ஒரு ஸ்பெஷல் பாடலுக்கு நடனமாடுகிறார் மெளனிராய்.
விஷால் தயாரிப்பில் கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கேஜிஎஃப் எனப்படும் கோலார் தங்க சுரங்கம் படம் அடுத்த வாரம் டிசம்பர் 21ம் தேதி தமிழ், கன்னடம், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியாகிறது.
இந்த படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தில் இடம் பெறவுள்ள ஒரு ஸ்பெஷல் பாடல் இன்று மற்றும் நாளை கூர்கானில் படமாக்கப்படவுள்ளது.
இந்த பாடலில் நடனமாட, நாகினி சீரியல் மூலம் இந்தியளவில் பிரபலமான மெளனி ராய் நடனமாடுகிறார். இவர், சமீபத்தில் வெளியான அக்ஷய் குமாரின் கோல்டு படத்தின் மூலம் பாலிவுட் நாயகியாக மாறியவர்.
1989ம் ஆண்டு வெளியான திரிதேவ் படத்தில் ஜாக்கி ஷெராஃபுடன் சங்கீத பிஜாலினி நடனமாடிய ’கல்லி கல்லி மெயின் பிர்தா ஹை’ என்ற பாடலை மறு உருவாக்கம் செய்யவுள்ளனர். இந்த பாடலுக்குத் தான் மெளனி ராய் நடனமாடவுள்ளார்.