ஏ.ஆர். ரஹ்மான் இசையில் சர்வம் தாள மயம் படத்தின் பீட்டர் பீட்ட ஏத்து பாடல் நேற்று வெளியானது. விஸ்வாசம் பாடல் ரிலீசால் இது வைரலாகவில்லை.
ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள சர்வம் தாள மயம் படம் வரும் டிசம்பர் 21ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் விஜய் ரசிகர்கள் தியேட்டரில் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோவில் செய்யும் ரகளைகளை பீட்டர் பீட்ட ஏத்து என்ற பாடல் மூலம் வடிவமைத்துள்ளனர்.
நேற்று விஸ்வாசம் படத்தின் அடிச்சு தூக்கு, மற்றும் மாரி2 படத்தின் வானம் பொழியாமல் பூமி விளையுமா என்ற இளையராஜா ஆகிய இரு பாடல்களும் வெளியாகின.
ஏ.ஆர். ரஹ்மான் இசை, விஜய் ரசிகர்களின் முதல் காட்சி கொண்டாட்டம் என இரு பெரும் விசயங்கள் இருந்தும் பீட்டர் பீட்ட ஏத்து பாடல், டிரெண்டிங்கில் வர முடியவில்லை. இதுவரை வெறும் 1 லட்சத்து 84 ஆயிரம் பேர் தான் இந்த பாடலை பார்த்துள்ளனர்.
அதே போல, தனுஷ் பாடல் எழுதி யுவன் இசையமைத்து இளையராஜா பாடிய மாரியின் ஆனந்தி பாடலும் டிரெண்டிங்கில் விஸ்வாசம் மற்றும் பேட்ட படங்களுடன் போட்டிப் போட முடியாமல் 11 லட்சம் பார்வைகளை கொண்டு யூடியூப் டிரெண்டிங்கில் 4ம் இடத்தில் உள்ளது.