விஜய் சேதுபதியின் 25வது படமான சீதக்காதியில், விஜய்சேதுபதி வெறும் 40 நிமிடங்கள் மட்டுமே வந்து போகிறார் என்ற தகவலை ப்ரிவ்யூ ஷோ காட்சி பார்த்த பத்திரிகையாளர்கள் விமர்சனத்தில் வெளிப்படுத்தினர்.
இதனால், விஜய்சேதுபதி ரசிகர்கள் பெரிய ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த நேரத்தில் அவர்களை சமாதானம் செய்யும் நோக்கத்துடனும், அதற்கான விளக்கத்தையும் வீடியோ மூலம் பதிவு செய்திருக்கிறார் விஜய் சேதுபதி.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “பொதுவாக ஒரு கலைஞனுக்கு ஏற்படக்கூடிய எண்ணத்தை கலையின் மூலம் வெளிப்படுத்துவான். அப்படி நடுவுல கொஞ்சம் பக்கதுல காணோம் படம் எடுத்த பாலாஜி தரணிதரனோட கலைக்கான நன்றி கடன்தான் இந்த சீதக்காதி. இப்படிப்பட்ட படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு இயக்குநர் பாலாஜிக்கு நன்றி.
இந்த படத்தில் படம் தொடங்கி 40 நிமிடம்தான் நான் வருவேன். அப்போ ஏன் இந்த படத்தை என்னுடைய 25வது படமாக சொல்லனும், என்னுடைய படமாக சொல்லனும். ஏனென்றால் இந்த படம் நான் ஏற்று நடித்திருக்கின்ற அய்யா என்கிற கதாபாத்திரத்தின் கதை. அய்யாவும், அய்யாவின், ஆன்மாவும், அய்யாவின் கலையைப்பற்றிய படம்.
படத்தை அனைவரும் தியேட்டரில் வந்து பாருங்கள். உங்கள் அனைவருக்கம் பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்த உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் உங்களையும் என்னையும் இணைக்கும் இந்த கலைக்கு மிகப்பெரிய நன்றி” எனத் தெரிவித்திருந்தார்.
தமன்னா நடிப்பில் வெளியான தேவி படத்தின் கதையும் இதுதான் என்று சொன்னால், பலரும் சண்டைக்கு வருவார்கள். ஆனால், தேவி பட இயக்குநர் சீதக்காதி மீது கேஸ் போடாமல் இருந்தால் சரி.