ஆன்மிக அரசியலை அறிவித்த ரஜினி, விரைவில் புதிய கட்சி தொடங்கவுள்ளார். அதற்கு முன்னோட்டமாக ரஜினி டிவி எனும் புதிய தொலைக்காட்சி சேனல் தொடங்க ரஜினி மக்கள் மன்றம் சார்பாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினி அரசியலுக்கு ஆழமாக அடித்தளம் போடும் பணிகளை துவங்கியுள்ளார். அரசியலுக்கு நுழைய வேண்டும் என்றால், மீடியா பலம் தேவை என்பதை சூப்பர்ஸ்டாருக்கு யாரும் சொல்லித் தர தேவையில்லை. இதனால், புதிய டிவி சேனலை தொடங்க திட்டமிட்டுள்ளார்.
இதற்காக, ரஜினி மக்கள் மன்றம் சார்பாக சி. பிரகாஷ் என்பவர் விண்ணப்பம் அனுப்பியுள்ளார். அதில், ரஜினி டிவி, சூப்பர்ஸ்டார் டிவி அல்லது தலைவர் டிவி என்கிற பெயரில் ரஜினியின் புதிய தொலைக்காட்சி சேனல் ஆரம்பமாகவுள்ளது.
மேலும், சமீபத்தில் தந்தி டிவியின் தலைமை பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்த ரங்கராஜ் பாண்டேவை ரஜினி டிவியின் தலைமை பொறுப்பில் அமர்த்தும் திட்டமும் உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
போருக்கு வந்தா ஜெயிக்கணும்னு ரஜினி சொன்னப்ப எல்லாரும் சிரிச்சாங்க, ஆனா, தலைவர் ஸ்ட்ராங்காத் தான் அடிதளம் போடுறாரு. கமல் விசில் ஆப் ஆரம்பிச்சாரு. ஆனால், ரஜினி புது சேனலே துவங்கப் போறாரு..
இது குறித்து ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் அச்சிடப்பட்ட லெட்டர் பேட் மூலம் டிரேட்மார்க் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட தடையில்லா சான்றிதழ் இணையத்தில் பரவி வருகிறது.
அதில் எந்தளவுக்கு உண்மைத் தன்மை உள்ளது என்பதை சம்பந்தபட்டவர்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கும் வரையில் உறுதியான தகவலாக கருத முடியாத சூழலும் நிலவி வருகிறது.