நடந்து முடிந்த இந்த சீசனில் பல இளம் வீரர்கள் தங்களின் திறமையை நிரூபித்தனர். அந்த வகையில் தனது "யார்க்கர்" பந்து வீச்சால் அனைவரையும் அசரடித்தவர் தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த நடராஜன்.
வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் ஓவரின் ஆறு பந்துகளையும் யார்க்கர் வீசும் திறன் பெற்றவர். இவர் இந்த 13 வது சீசனில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வாய்ப்பை சரியாக பயன்படுத்திய நடராஜன் அபாரமாகப் பந்து வீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதற்குப் பரிசாக இந்த ஆண்டில் நடைபெற உள்ள ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் இடம்பெற்றுள்ளார். முதலில் ஒருநாள் போட்டியில் இடம்பெறாத நடராஜனுக்கு இஷாந்த் சர்மா சேர்க்கப்படாததால் இடம்கிடைத்தது.
எனினும் பிளெயிங் லெவனில் இடம்கிடைக்கவில்லை. முதல் இரு ஒருநாள் போட்டிகளிலும் பந்துவீச்சில் தடுமாறியது இந்திய அணி. இதையடுத்து, பிளெயிங் லெவனில் நடராஜனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்தன. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ், கேள்வியாக தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்தது. அதனை டேக் செய்தி காமெடி நடிகர் சதீஷ், ``நிச்சயமாக அடுத்த ஆட்டத்தில் அவருக்கு வாய்ப்பளிக்கப் பட வேண்டும். திறமை மற்றும் காலத்தின் கட்டாயம்" என்று குறிப்பிட்டுள்ளார்.