ஐதராபாத்தில் பிராமண சமூகத்தைச் சேர்ந்த வீரர்களுக்காக கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தேசிய விளையாட்டு ஹாக்கியாக இருந்தாலும், அதிகம் கவனம் செலுத்தப்படும் விளையாட்டு கிரிக்கெட் தான். என்னென்றால் கிரிக்கெட் விளைாயாட்டிற்கு தான் இந்தியாவில் அதிகளவு ரசிகர்கள் உள்ளார்கள் என்பதில் மாற்று கருத்தே இல்லை. கிரிக்கெட் என்பது வெறும் விளைாட்டடாக மட்டுமின்றி உணர்வுபூர்வமான அங்கமாக பார்க்கப்படுகிறது.
இந்திய அணியில் பல்வேறு சமூகத்தை சேர்ந்த வீரர்கள் விளையாடி வருகின்றனர். இந்தியாவில் நடைபெறும் டி20 ஐபிஎல் போட்டில் உலகளவில் கிரிக்கெட் வீரர்கள் விளையாடி வருகின்றனர். இந்நிலையில், ஐதராபாத்தில் நடந்த ஒரு கிரிக்கெட் டோர்னமென்ட் ஒரு குறிப்பிட்ட சமுதாயப் பிரிவினருக்காக நடத்தப்பட்டது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த டிசம்பர் 25 மற்றும் 26-ம் தேதிகளில் ஐதராபாத்தில் உள்ள பி.எஸ்.ஆர். விளையாட்டு மைதானத்தில், பிரமாணர் சமூகத்தைச் சேர்ந்த வீரர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் கிரிக்கெட் டோர்னமென்ட் நடத்தப்பட்டுள்ளது. இந்த போட்டிக்கான அறிவிப்பு வெளியிட்டதன் மூலம் ஒரு சமூகத்தினருக்கு மட்டும் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது தெரியவந்தது.போட்டி அறிவிப்பில், பங்கேற்கவுள்ள வீரர்கள் தங்கள் அடையாளத்திற்கான ஆதாரத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் பிரமாணர் தவிர்த்து வேறு சமூக வீரர்களுக்கு அனுமதியில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது இந்த கிரிக்கெட் போட்டியின் அறிவிப்பானது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. கிரிக்கெட் போட்டிகளில் அதிகம் பிராமண சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்துவதாக குற்றம்சாட்டு எழுந்து வரும் நிலையில், இந்த போட்டி நடைபெற்றது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.