ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வியடைந்த இந்தியா, மெல்போர்னில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்ச்சி தொடரை 1-1 எண்ற கணக்கில் சமன் செய்தது.
இதற்கிடையே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் வீரராக இறங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் சுப்மன் கில் சிறப்பாக விளையாடி ரசிகர்களை தனது பக்கம் இழுத்தார். இருப்பினும், அவரது ஆட்டம் அந்த வீரரை போல உள்ளது என ரசிகர்களும், கிரிக்கெட் விமர்சகர்களும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் அவருக்கு நிகர் அவரே. அவரை யாருடனும் ஒப்பிட வேண்டாம் என கில்லுக்கு ஆதரவாக இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் வாசிம் ஜாபர் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாசிம் ஜாபர், சுப்மன் கில் தனிச்சிறப்பு மிக்க வீரர் தான். அவரது ஆட்டத்தை அனுபவித்து விளையாட விடுங்கள். அவரை யாருடனும் ஒப்பிட்டு பேச வேண்டாம். அது அவருக்கு அழுத்தத்தை கொடுக்கலாம். அவர் அடுத்த முன்னாள் வீரர் இல்லை. அவர் முதல் கில். அவ்வளவு தான். அதுமட்டும் தான் வழக்கத்திற்கு மாறான எதிர்பார்ப்பினால் திறம்படைத்த வீரர்களை நாம் இழந்துள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.