முதல்வர் யார் தேர்தலுக்கு அப்புறம் பார்க்கலாம் : பாஜக மேலிடப் பொறுப்பாளர் தகவல்

by Balaji, Dec 30, 2020, 20:24 PM IST

தேர்தலுக்கு பிறகே முதல்வர் வேட்பாளர் யார் என்பது பற்றி முடிவு செய்யப்படும் என பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜக இடம் பெற்றுள்ள கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை என்பதால், அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமியே என அறிவிக்கப்பட்டு, பிரசாரமும் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் கூட்டணியில் இருக்கும் பாஜக கூட்டணியில் பாஜக முதல்வர் முதல்வர் யார் என்பதை மோடி முடிவு செய்வார் அமித்ஷா முடிவு செய்வார். மேலிடம் முடிவு செய்யவும் என்றெல்லாம் சொல்லி செய்து வருகிறார்கள். முதல்வர் யார் என்பதை மோடி முடிவு செய்வார்.. அமித்ஷா முடிவு செய்வார்.. மேலிடம் முடிவு செய்யும்.. என்றெல்லாம் சொல்லி அதிமுக அவைத் தொடர்ந்து சீண்டி வருகிறது.

இந்த நிலையில், தமிழக பாஜகவின் 234 சட்டமன்ற தொகுதிகளின் அமைப்பாளர்கள், பொறுப்பாளர்கள் மாவட்ட தலைவர்களின் ஆலோசனை கூட்டம் மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி, மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் மேலிடப்பொறுப்பாளர் சிடி.ரவி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர்தான், முதல்வரை தேசிய ஜனநாயக கூட்டணியே முடிவு செய்யும். தேசிய ஜனநாயக கூட்டணிதான் வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும். எங்கள் கூட்டணி உறுதியான கூட்டணி. மேலும், தேர்தல் தேதி அறிவிப்புக்கு பிறகு, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் முதல்வர், துணை முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிக்கப்படும். தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவரான பிரதமர் மோடி தான்.

முதல்வர் வேட்பாளர் குறித்த முடிவு எடுப்பார் என்றும், தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பிறககே தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படும் என்றார். பாஜகவின் முதல்வர் வேட்பாளர் குறித்த கேள்விகளுக்கு, அதிமுக தேர்தல் பிரசார கூட்டத்தில், அதிமுக எம்.பி.யும், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரான கே.பி.முனுசாமி பதில் பேசுகையில் கூட்டணியில் எந்த தேசிய கட்சிகளும், மாநில கட்சிகள் வந்தாலும் அதிமுக தலைமையில்தான் ஆட்சி. இதில் கூட்டணி ஆட்சி என்பதற்கே இடமில்லை. தேவையும் இல்லை. எனவே கூட்டணி ஆட்சி அமைப்போம், கூட்டணி அமைச்சரவை அமைப்போம் என்று எண்ணத்தோடு எந்த அரசியல் கட்சிகளும் நம்முடன் கூட்டணி வரும்போது இதை சிந்தித்துக்கொள்ளவேண்டும் என்றார்.

You'r reading முதல்வர் யார் தேர்தலுக்கு அப்புறம் பார்க்கலாம் : பாஜக மேலிடப் பொறுப்பாளர் தகவல் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை