அனைத்து கிரிக்கெட் லீக் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா அறிவித்துள்ளார். முன்னதாக, சர்வதேச ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா அறிவித்தார். இருப்பினும், ஐபிஎல் டி20 போட்டியில் மும்பை அணிக்காக தொடர்ந்து விளையாடி வந்தார். ஐபிஎல் போட்டியில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் பெருமையையும் மலிங்கா கொண்டுள்ளார்.
இதற்கிடையே, 2021-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து மலிங்கா விடுவித்தது. இந்த அறிக்கை வெளியான சில மணிநேரங்களில், அனைத்து கிரிக்கெட் லீக் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக மலிங்கா அறிவித்தார். மேலும், இந்தியாவில் நடக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இலங்கை அணி சார்பில் விளையாடியப்பின், டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக மலிங்கா அறிவிப்பார் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.
லீக் கிரிக்கெட் போட்டி ஓய்வு குறித்து மலிங்கா வெளியிட்டுள்ள அறிக்கையில், குடும்ப உறுப்பினருடன் ஆலோசனை நடத்தியப்பின் ஆலோசனைக்குப்பின், அனைத்து லீக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற இது சரியான நேரம் என நினைக்கிறேன். மேலும் கொரோனா தொற்று காரணமாக எந்த நாட்டுக்கும் பயணம் செய்ய முடியாத சூழல் அமைந்துவிட்டது.
என்னுடைய முடிவு குறித்து மும்பை அணி நிர்வாகத்திடம் ஆலோசனை நடத்தினேன். அவர்கள் அடுத்துவரும் ஐபிஎல் ஏலத்துக்கு தயாராகும் நிலையில் இந்த முடிவை முன்கூட்டியே அறிவித்தேன். நான் கிரிக்கெட் போட்டிகளில் சுதந்திரமாக செயல்படவும் மும்பை அணி நிர்வாகம் அனுமதித்தது. மும்பை இந்தியன்ஸ்அணியில் நான் இருந்தவரை என்னை குடும்பத்தில் ஒருவராகவே நடத்தினர். களத்திலும், வெளியிலும் 100 சதவீதம் நம்பிக்கையளித்து, ஊக்கமளித்து நான் சிறப்பாகச் செயல்பட வைத்தனர். மகிழ்ச்சியான நினைவுகளை சுமந்துகொண்டு, மும்பை அணி நிர்வாகத்துக்கு நன்றி செலுத்தி விடை பெறுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.