ராகுல் டிராவிட் மற்றும் ரவி சாஸ்திரியை பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சாம் உல் ஹக் பாராட்டுயுள்ளார். ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை தொற்கடித்து பார்டர் – கவாஸ்கர் கோப்பையை தட்டி வைத்தது. இதற்கு பிரதமர் மோடி மற்றும் கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இந்திய அணியையும், பயிற்சியாளர்களையும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் ராகுல் டிராவிட்டை பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சாம் உல் ஹக் வெகுவாக பாராட்டியுள்ளார். செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த இன்சாம் உல் ஹக், இந்தியாவின் இந்த வெற்றியில், ரவி சாஸ்திரியின் பங்கு பற்றி பெரிதாக மக்கள் கண்டுகொள்ளவில்லை. அவர் அணியின் இயக்குநராக இருந்து, பின் தலைமை பயிற்சியாளராக உருவெடுத்துள்ளார். அவரது அனுபவமும், ஆட்டத்தைப் பற்றிய
அறிவும், இந்திய அணிக்கும் வீரர்களுக்கும் பெரிதும் பயன் அளித்துள்ளது. எல்லோரும் அவர் விளையாடியதைப் பார்த்திருக்கிறோம். இந்திய அணியின் சிறந்த வீரர் அவர் அட்டகாசமான ஆல் ரவுண்டர் என்றார்.
மேலும், ஆஸ்திரேலியாவை அவர்கள் மண்ணில் டெஸ்ட் தொடரில் வீழ்த்துவதுதான் இருப்பதிலேயே கடினமான விஷயம். என் வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு இளம் அணி, ஆஸிதிரேலியா அணியை அவர்கள் மண்ணிலேயே வீழ்த்தியதைப் பார்த்ததில்லை. எப்படி இவர்களால் சாதிக்க முடிந்தது என நினைத்துப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.
அனைவரின் ஆட்டத்தை செதுக்கியதில் டிராவிட்டின் பங்கு இருக்கிறது. ஏன் டிராவிட்டை சுவர் என்று அழைக்கிறார்கள் என்றால், அவரது வலுவான டிஃப்ன்ஸ்தான் காரணம். அவரால் எந்த சூழலிலும் விளையாட முடியும். மனரீதியாக வலுவானவர். எந்த பொசிஷனுக்கும் ஏற்ப தன்னை தயார்படுத்திக் கொள்வார். டிராவிட், இந்த வீரர்களுடன் பணிபுரிந்து, இவர்களை மனரீதியில் வலுவானவார்களாக மாற்றி இருக்கிறார் என்றும் பெருமிதமாக தெரிவித்தார்.