பிரிஸ்பேன் டெஸ்ட் தொடரில் பதம் பார்த்த ஆஸ்திரேலியா: இன்று வரை காயம் ஆறாமல் புஜாரா வேதனை!

by Sasitharan, Jan 29, 2021, 21:06 PM IST

ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது. இருப்பினும், நட்சத்திர வீரர்கள் இல்லாத நிலையில், ஆஸ்திரேலியா அணியை வீழ்த்திய ரகானே தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியை பல்வேறு தரப்பினர் பாராட்டிய வண்ணம் உள்ளனர். இறுதி தொடரில் காயம் காரணமாகதான் நட்சத்திர வீரர்கள் விலகினர்.

இதற்கிடையே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பிரிஸ்பேன் டெஸ்டில் ஒரு இன்னிங்சில் தான் இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா, விளையாடினார். ஆனால், சுமார் பதினோரு முறை ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் பந்து புஜாராவை பதம் பார்த்தது. இருப்பினும், புஜாராதான் கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசல்வுட் பந்துகளை பவுண்டரிக்கும் அதே இன்னிங்ஸில் விளாசியிருப்பார். இன்னிங்ஸில் 211 பந்துகளில் 56 ரன்களை புஜாரா எடுத்திருந்தார்.

இந்நிலையில், பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் புஜாராவிற்கு ஏற்பட்ட காயம் இன்னும் ஆறவில்லை என தெரியவந்துள்ளது. இது குறித்து புஜாரா கூறுகையில், போட்டியில் விக்கெட்டை விடக்கூடாது என்பது எங்களது திட்டமாக இருந்தது. இந்த இன்னிங்ஸ் நான் விளையாடிய கடினமான இன்னிங்ஸில் ஒன்று.விக்கெட் வீழ்த்த வேண்டுமென்று ஆஸ்திரேலியா வீரர்கள் திட்டமிட்டனர்.

ஒரு கட்டத்தில் விக்கெட்டை வீழ்த்த வேண்டுமென்ற அழுத்தம் ஆஸ்திரேலியா வீரர்கள் மீது ஏற்பட்டது. இருப்பினும், என உடலில் படும் பந்துகளை பற்றி நான் கவலை கொள்ளக் கூடாது என்பதிலும் கவனமாக இருந்தேன். ஏனென்றால் அந்த ஆடுகளத்தில் ஒரு எண்டில் கணிக்க முடியாத அளவுக்கு பந்து பவுன்ஸ் ஆனது. நான் அதிகமுறை காயம் பட்டதும் அந்த எண்டில்தான் என்றார்.

அவர்கள் வீசிய லூஸ் பாலை பயன்படுத்தி ஷாட் ஆடினேன். பந்து என உடலில் பட்ட போதெல்லாம் கடுமையான வலி. இருந்தாலும் நான் இங்கிருந்து அவுட்டாக போவதில்லை என்பதில் தீர்க்கமாக இருந்தேன். இருப்பினும், அந்த வலி பேட்டை இறுக்கமாக பற்றி விளையாடவே முடியாத சூழலை கொடுத்துவிட்டது. இன்னும் இன்னிங்ஸில் பட்ட காயம் ஆறவில்லை. ரத்தம் வடிகிறது, ரத்த கட்டு இருக்கிறது என்று தெரிவித்தார்.

You'r reading பிரிஸ்பேன் டெஸ்ட் தொடரில் பதம் பார்த்த ஆஸ்திரேலியா: இன்று வரை காயம் ஆறாமல் புஜாரா வேதனை! Originally posted on The Subeditor Tamil

More Cricket News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை