மனைவிகளுக்கு உண்மையாக இருந்ததே இல்லை: கால்பந்து `பாகுபலி பீலே ஒபன் டாக்!

by Sasitharan, Feb 23, 2021, 19:21 PM IST

என் மனைவிகளுக்கு உண்மையானவனாக இருந்தது இல்லை என பிரபல கால்பந்து வீரர் பீலே அதிர்ச்சியளிக்கும் வகையில் தெரிவித்துள்ளார். கால்பந்து போட்டியில் உலகின் பாகுபலியான பீலே, பிரேசில் நாட்டுக்காக கால்பந்து போட்டியில் பங்கேற்று 1958, 1962 மற்றும் 1970 ஆகிய ஆண்டுகளில் ஃபிபா உலகக் கோப்பையை பிரேசிலுக்கு பீலே வென்று கொடுத்துள்ளார். 4 உலக கோப்பை போட்டிகளுடன் கடந்த 1957 ம் ஆண்டு முதல் 1971ம் ஆண்டு வரை பிரேசில் அணிக்காக பீலே, 92 சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இந்நிலையில், நெட்ப்ளிக்சில் வெளியாகி உள்ள பீலே ஆவணப்படத்தில் அவர் வாழ்க்கை வரலாறு குறித்த அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளது. நான் என் மூன்று மனைவிகளுக்கும் உண்மையானவனாக இருந்தது இல்லை. எனக்கு எத்தனை பிள்ளைகள் இருக்கிறார்கள் என்றுகூட எனக்கு தெரியாது. எனக்கு சிலருடன் ரகசிய காதலும் இருந்துள்ளது. அந்த காதலின் அடையாளமாக குழந்தைகளும் பிறந்துள்ளன. இதை நான் சொல்லியாக வேண்டுமென்பதால் சொல்கிறேன் என்று பீலே தெரிவித்துள்ளார். தற்போது, பீலே-விற்கு 80 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading மனைவிகளுக்கு உண்மையாக இருந்ததே இல்லை: கால்பந்து `பாகுபலி பீலே ஒபன் டாக்! Originally posted on The Subeditor Tamil

More Cricket News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை