டெல்லியில் துணிகரம்.. 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்..!

by Logeswari, Nov 6, 2020, 21:16 PM IST

டெல்லியில் 60 வயது முதியவர், 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் வடக்கு பகுதியில் பிறந்து சில நேரங்களே ஆன குழந்தையை சாலையோரம் கிடந்ததுள்ளது. இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் விரைந்து வந்து குழந்தையை கைப்பற்றி விசாரணையில் இறங்கினர். அப்பொழுது அந்த சாலையில் பொருத்தப்பட்ட கேமராவில் ஒரு பெண் குழந்தையை சாலையில் வைத்து விட்டு சென்றது பதிவாகியது. மேலும் விசாரணை நடத்திய போலீஸ் அந்த பெண் அதே பகுதியை சேர்ந்த கூலி வேலை செய்யும் பெண்ணின் மகள் என்று தெரியவந்தது.

அந்த பெண்ணுக்கு வெறும் 16 வயது தான் கடந்துள்ளது. அந்த பெண்ணை விசாரிக்கும் பொழுது பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். அதாவது அந்த சிறுமி 60 வயது முதியவரால் பலாத்தாரம் செய்யப்பட்டு கர்ப்பம் ஆகியுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு மொட்டை மாடியில் குழந்தையை பெற்று எடுத்து யாருக்கும் தெரியாமல் சாலையோரம் வைத்து விட்டதாக கூறியுள்ளார். இது குறித்து சிறுமியை பலாத்காரம் செய்த முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ப்பட்டுள்ளார்.

More Delhi News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை