டெல்லியில் 6 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தை நீதிமன்றத்தில் தாய் புகார்

6 year old girl allegedly raped by father in delhi

by Nishanth, Sep 29, 2020, 12:13 PM IST

டெல்லியில் 6 வயது மகளை பலாத்காரம் செய்த தனது கணவருக்கு எதிராக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி நீதிமன்றத்தில் பெண் புகார் கொடுத்துள்ளார்.


கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த ஒரு தம்பதி டெல்லியில் ஹோட்டல் மற்றும் சுற்றுலா விடுதி நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள் உண்டு. இந்நிலையில் மனைவி இல்லாத நேரத்தில் தனது மகளை அந்த நபர் மிரட்டி அடிக்கடி பலாத்காரம் செய்து வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் தான் அந்த சிறுமி தனது தாயிடம் இந்த விவரத்தை கூறியுள்ளார். தினமும் அதிகாலை 4 மணிக்கு இந்த சிறுமியின் தாய் ஹோட்டலுக்கு காய்கறி வாங்குவதற்காக மார்க்கெட்டுக்கு சென்று விடுவார். இந்த சமயத்தில் தான் மகளை தந்தை பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
இதுகுறித்து அந்த சிறுமியின் தாய் கடந்த ஜனவரி மாதமே சரிதா விகார் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த சிறுமியின் தந்தைக்கு போலீஸ் உயர் அதிகாரிகளுடன் தொடர்பு இருந்தால் தான் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.


இதையடுத்து அந்த சிறுமியின் தாய் டெல்லி சிறுவர் நல மையத்தில் புகார் கொடுத்தார். அவர்களின் உதவியுடன் பின்னர் அவர் டெல்லி சாங்கேத் நீதிமன்றத்தில் புகார் கொடுத்தார். இதை விசாரித்த நீதிமன்றம், பலாத்காரம் தொடர்பாக உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும், சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தவும் போலீசுக்கு உத்தரவிட்டது. புகார் கொடுத்தும் வழக்குப்பதிவு செய்யாமல் இருந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்துஅந்த சிறுமியின் தந்தை மீது போக்ஸோ பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இவர் கேரளாவில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

You'r reading டெல்லியில் 6 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தை நீதிமன்றத்தில் தாய் புகார் Originally posted on The Subeditor Tamil

More Delhi News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை