கமர்ஷியல் படங்களுக்கு முழுக்கு போடும் உலக நாயகனின் மகள்.. திடீர் முடிவுக்கு காரணம் என்ன?

by Chandru, Sep 29, 2020, 12:33 PM IST

உலக நாயகன் கமல்ஹாசன் மகள் நடிகை ஸ்ருதி ஹாசன், ஒரு சமீபத்திய பேட்டியில், வணிக சினிமா ஒரு நடிகைக்கு தொழில்துறையில் உயிர் வாழ உதவும் என்று கூறும் நபர்களின் பேச்சை கேட்பதை எவ்வாறு நிறுத்தி விட்டாரம்.
12 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா துறையில் இருப்பதால், ஸ்ருதி ஹாசன் ஏராளமான ரசிகர்களைப் பெற்றிருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய பல மொழிப் படங்களில் நடிக்கும் ஸ்ருதி தனது ஸ்கிரிப்ட்களைத் தேர்ந்தெடுப்பது குறித்தும், பல ஆண்டுகளாக தனது பயணம் எவ்வாறு நடந்திருக்கின்றன என்பதை பற்றி தெரிவித்திருக்கிறார்.


ஸ்ருதிஹாசன் கூறியதாவது:
கமர்ஷியல் ரீதியான படங்களை (வணிக ரீதியான படம்) மட்டுமே நான் தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்று கூறும் நபர்களின் பேச்சை இனி கேட்க மாட்டேன். நான் சில பிளாக்பஸ்டர் படங்களில் ஒரு அங்கமாக இருந்தேன், ஆனால் அவற்றைச் செய்வதற்கு அதிக நேரம் தேவைப்படவில்லை. இப்போது மிகவும் நேர்மையான ஸ்கிரிப்ட்களை தேர்வுகளை செய்கிறேன். ஒரு நட்சத்திரக் குழந்தையாக கமல்ஹாசனின் மகளாக இருப்பது தொழில் துறையின் கதவைத் திறக்கும் திறவு கோளாக இருக்கிறது என்று நான் எப்போதும் சொல்லி வந்திருக்கிறேன். லண்டன் சென்றபோது மக்கள் எனது இசையைக் கேட்க விரும்பினர், அது ஆச்சரியமாக இருந்தது. இது ஒரு கற்பனை அல்ல, எனக்கு திறமை இருக்கிறது என்பதற்கு இது ஒரு நல்லிணக்கமாகும்.இவ்வாறு ஸ்ருதி ஹாசன் கூறினார்.


கொரோனா ஊரடங்கில் வீட்டில் சமைப்பது, தனது செல்லப் பூனை கிளாராவுடன் விளையாடுவது எனப் பொழுதை கழித்தார். தற்போது ​​அவர் ஹைதராபாத்திற்கு சென்றிருகிறார். அங்கு படப்டிப்பில் பங்கேற்கிறார்.
நடிகர் ரவி தேஜாவுடன் ஸ்ருதியின் நடித்திருக்கும் படம் கிராக் திரையரங்கு வெளியீட்டிற்காக காத்திருக்கிறது. பவன் கல்யாணின் வக்கீல் சாப் படப் பிடிப்பையும் ஸ்ருதி மீண்டும் தொடங்க உள்ளார். தனது தமிழ் படம் லாபம் ரிலீஸையும் எதிர்பார்த்துக்கொண்டிக்ருகிறார். எஸ்.பி ஜனநாதன் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Cinema News

அதிகம் படித்தவை