முசிறி வனபகுதியில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம்- வெளியான பரபரப்பான தகவல்

முசிறி வனப்பகுதியில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தால் பரபரப்பு

முசிறிவனபகுதியில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்த பரபரப்பான தகவல் கிடைத்துள்ளது. மனைவியே கள்ளகாதலுடனும் சேர்ந்து கணவனே அடித்து கொன்றுள்ளார்.

முசிறியில் இருந்து தா.பேட்டை செல்லும் சாலையில் தும்பலம் கிராமத்தின் அருகே வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் கடந்த 14ம் தேதியன்று சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். சடலத்தை பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள், முசிறி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் அங்கு வந்து, இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

ஆனால் இறந்து கிடந்தவர் பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை. இறந்து கிடந்தவரின் தலையில் ரத்த காயங்கள் இருந்தன. இதனால் அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்காலம் என்று போலீசார் சந்தேகப்பட்டனர். மேலும் அவரை மர்ம நபர்கள் வேறு எந்த பகுதியிலாவது வைத்து அடித்து கொலை செய்து விட்டு இங்கு கொண்டு போட்டு இருக்கலாம் என்ற சந்தேகமும் அவர்களுக்கு சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் இறந்து கிடந்தவர் லோடுமேன் கோவிந்தராஜ் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரது மனைவி செல்வியிடம் போலீசார் தங்களது பாணியில் விசாரணை நடத்தினர்.
போலீஸ் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியே வந்தது. செல்விக்கும், அவரது பக்கத்து வீட்டுக்காரர் தங்கதுரைக்கும் நெருக்கமான உறவு இருந்து வந்துள்ளது.

கணவர் உண்ணும் உணவில் தூக்க மருந்தை கொடுத்து அவரை தூங்க வைத்து விட்டு, தங்கதுரையும், செல்வியும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ஒருநாள் செல்வியும், தங்கதுரையும் உல்லாமாக இருப்பதை கோவிந்தராஜ் பார்த்து விட்டார். இதனால் கோவிந்த ராஜுக்கும், செல்விக்கும் சண்டை நடந்தது. இதனையடுத்து தனது கணவரை தீர்த்து கட்ட செல்வி முடிவு செய்தார். கள்ளகாதலன் தங்கதுரை உதவியுடன் தனது கணவரை செல்வி கொலை செய்தார். பின் அந்த உடலை அவர்கள் இருவரும் முசிறி வனப்பகுதியில் கொண்டு போட்டுள்ளனர். இதனையடுத்து தங்கராஜ் மற்றும் செல்வியை போலீசார் கைது செய்தனர்.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்

Tamil news, Latest Tamil News, Tamil News Online, Tamil Nadu Politics, Crime News, Tamil Cinema, Tamil Movies, Movie review, Sports News