இளைஞர்களையும் பாதிக்கும் ஆர்த்ரைடிஸ்

Arthritis: An increasing problem among youth

by SAM ASIR, Jun 15, 2019, 12:11 PM IST

24 வயது இளைஞன். சுறுசுறுப்பாக இயங்க வேண்டிய வயது. ஆனால், இடுப்பு வலியால் மூன்று ஆண்டுகள் வேதனைப்பட்டு வருகிறான். வலி என்றால் வேலையையே விட்டுவிட்டு வீட்டில் முடங்கிக் கிடக்கச்செய்யுமளவுக்கு தீவிர வலி. பரிசோதனையில் அவனுக்கு இடுப்பு பழுதுபட்டுள்ளது தெரிய வருகிறது. ஆங்கிலாசிங் ஸ்பாண்டிலிட்டிஸ் என்னும் இடுப்புமூட்டு வாதம் அவனை தாக்கி, அசையவிடாமல் செய்துள்ளது.

மருத்துவர்களுக்கு வேறு வழியில்லாமல் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தனர். சிகிச்சைக்குப் பின்னர் அவன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளான். ஒருவேளை சரியான நேரத்தில் அவனுக்கு நோய் கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் அறுவைசிகிச்சை தேவைப்படாத அளவுக்கு குணப்படுத்தியிருக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

வாதத்தின் வகைகள்:

ஆர்த்ரைடிஸ் என்று கூறப்படும் கீல் மற்றும் மூட்டு வாதத்தினால் நம் நாட்டு மொத்த மக்களில் 15 விழுக்காட்டினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்டியோஆர்த்ரைடிஸ்: வயது மூப்பின் காரணமாக மூட்டுகள் பழுதடைவது, அதிக எடை மற்றும் உடலுழைப்பு குறைவு ஆகியவற்றின் காரணமாக இவ்வகை பாதிப்பு ஏற்படுகிறது.
ஆட்டோஇம்யூன் ஆர்த்ரைடிஸ்: உடலின் ஒட்டுமொத்த நோயெதிர்ப்பு ஆற்றல் குறைவதால் வரும் இவ்வகை வாதமே இளைஞர்களை தாக்குகிறது.

ருமெட்டாய்டு ஆர்த்ரைடிஸ்: மேற்சொன்ன நோயெதிர்ப்பு ஆற்றல் குறைவு காரணமான வாதத்தில் ஒருவகை இந்த ருமெட்டாய்டு ஆர்த்ரைடிஸ் ஆகும். இது மணிக்கட்டு மற்றும் சிறுமூட்டுகளை தாக்கும்.

ஆங்கிலாசிங் ஸ்பான்டிலிட்டிஸ்: 20 முதல் 30 வயது இளைஞர்கள், வாலிபரை தாக்கக்கூடிய இந்நோயினால் ஏற்படும் பாதிப்பை மீட்க இயலாது. இது எலும்புகளின் அதிகப்படியான வளர்ச்சி, எலும்புகள் உரசுதல் ஆகியவற்றால் இடுப்பு மற்றும் முதுகெலும்பில் பாதிப்பை உருவாக்குகிறது. இது ஆண்களையே பெரும்பாலும் தாக்குகிறது.

சோரியாடிக் ஆர்த்ரைடிஸ்: சோரியாஸ் என்னும் சருமநோய் தொடர்பான மூட்டுவாதம்.
ரீயாக்டிவ் ஆர்த்ரைடிஸ்: குறிப்பிட்ட பாக்டீரியா என்னும் நுண்கிருமி தொற்றினால் ஏற்படும் மூட்டுவாதம்

அறிகுறிகள்:

வயதானவர்களை தாக்கும் ஆஸ்டோஆர்த்ரைடிஸ் நோய்க்கு மூட்டுகளில் வலி மற்றும் மூட்டுகள் விறைத்தல் ஆகியவை அறிகுறிகளாகும். இளைஞர்களுக்கு வரும் ருமெட்டாய்டு ஆர்த்ரைடிஸின் அறிகுறி மூட்டுகளில் வீக்கமும் வலியும் தோன்றுதல், விரல்கள், முன்கை மற்றும் மணிக்கட்டுகளில் அழற்சி மற்றும் விறைப்பு ஆகியவை தோன்றுதல். மூட்டுகளில் இளக்கம் மற்றும் வலி தோன்றினால் எச்சரிக்கையாகி மருத்துவஆலோசனை பெறவேண்டும்.

காரணங்கள்:

நாற்பதுகளின் தொடக்கத்தில் இருப்போருக்கு கீல்வாதத்தில் அறிகுறிகள் தெரியலாம். வயது மற்றும் வழிதோன்றல் காரணங்கள் தவிர்த்து அதிக உடல் பருமன் மற்றும் எடையும் இந்நோயை தூண்டுகிறது.

அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்தல், நொறுக்குத் தீனி ஆகியவை வளர்சிதை மாற்றத்தில் கோளாறை உருவாக்கி வாதத்தை கொண்டு வருகிறது. குறைந்த உடல் எடை, தசை பலவீனம், வைட்டமின் டி மற்றும் பி12 குறைவு, இரத்த நிறமியான ஹீமோகுளோபின் குறைவு, சரியான முறையில் உட்காராத, நிற்காத, நடக்காத பழக்கம் ஆகியவை இளைஞர்களுக்கும் இப்பாதிப்பு உருவாக காரணமாகிறது. உயரத்திற்கும் எடைக்கும் உள்ள விகிதமான உடல் நிறை குறியீடு (BMI) முப்பதுக்கும் அதிகமாக இருப்பது மூட்டுகள் மற்றும் எலும்புகளை பலவீனமாக்கும்.

உணவு கட்டுப்பாடு:

பொறித்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து, காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடவேண்டும். புகையிலை மற்றும் மது வஸ்துகளை பயன்படுத்தக்கூடாது. ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ள மீன்கள் மற்றும் குறிப்பிட்ட பழங்கள், காய்கறிகள் கண்டிப்பாக சாப்பாட்டில் இடம்பெற வேண்டும்.
இறைதியானம், பிஸியோதெரபி என்னும் இயன்முறை சிகிச்சை ஆகியவற்றை கடைப்பிடித்தல், உடல் எடை தொடர்ந்து கண்காணித்து வருதல் ஆகியவற்றால் இப்பாதிப்பு தீவிரமாகாமல் தடுக்கலாம்.

உடல் எடையை குறைக்க கடினமாக ஒர்க்கவுட் செய்யும் வரு!

You'r reading இளைஞர்களையும் பாதிக்கும் ஆர்த்ரைடிஸ் Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை