இவற்றை செய்யுங்க... இதயநோய் வரவே வராது

Advertisement

எஞ்ஜினை போல இடையறாது இயங்கி எரிபொருள் போல நம் உடலுக்கு வேண்டிய இரத்தத்தை அனுப்புவது இதயம். நம் வாழ்க்கை முறை பெரும்பாலும் இதயத்திற்கு ஆபத்தை கொண்டுவரக்கூடியதாகவே உள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கை முறை, நிம்மதியான பணிச்சூழல் நம்மில் பலருக்கு எட்டாகனியாகவே இருந்து வருகிறது.
வாழ்க்கையை முறையை மாற்றியமைத்தாலே இதயநோயிலிருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.

உடலுழைப்பு: தினமும் இரண்டு மணி நேரம் உட்கார்ந்து தொலைக்காட்சி பார்ப்பவர்களுக்கு இதயநோய் வருவதற்கான வாய்ப்பு 15 விழுக்காடு அதிகம் என்று அமெரிக்க ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஓர் ஆய்வு கூறுகிறது. அதேவேளையில் தினமும் அரை மணி நேரம் ஏதாவது ஓர் உடற்பயிற்சி செய்தால் உங்கள் இதயம் ஆரோக்கியமடையும். ஏனெனில் பயிற்சி செய்யும்போது உடலில் இரத்த ஓட்டம் அதிகமாகிறது. இரத்த அழுத்தம் சீராகிறது.

சரியான எடை: நோஞ்சான் போல குறைந்த எடையுடன் இருப்பது, அண்டர்டேக்கர் போல பிரமாண்டமாக இருப்பது இரண்டுமே இதயநோய்க்கு வழிவைக்கக்கூடியவைதாம். உங்கள் உடல் எடையை சரியாக பராமரித்து, இரத்த ஓட்டம் சீராக இருக்கும்படியும், உடலில் தேவையான அளவு நீர்ச்சத்து இருக்கும்படியும் கவனமாக காத்துக்கொண்டால் தேவையற்ற இதயகோளாறுகளை தவிர்க்கலாம்.

சமச்சீர் உணவு: குறைந்த கலோரி (ஆற்றல்) மற்றும் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து கொண்ட உணவு இதயத்திற்கு நண்பன்! பதப்படுத்தப்பட்ட இறைச்சி, ஐஸ்கிரீம் போன்ற அதிக அளவு கொலஸ்ட்ரால் (ஒரு வகை கொழுப்பு) நிறைந்த உணவு பொருள்களை சாப்பிடுவது இதய ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. தோல் நீக்கப்படாத முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், கோழியிறைச்சி மற்றும் மீன் ஆகிய உணவு பொருள்கள் இதயநோய் வரும் அபாயத்திலிருந்து பாதுகாக்கும்.

இலகுவான மனம்: இதயத்திற்கு அபாயமணி அடிப்பதில் மனஅழுத்தத்திற்கு முக்கிய பங்கு உண்டு. மனஅழுத்தம் உங்கள் இதயத்தை பாதித்துவிடாமல் காக்கக்கூடிய ஒரே ஒரு செயல் உடற்பயிற்சி மட்டுமே. உடற்பயிற்சி செய்தால், எண்டார்பின் என்னும் வேதிப்பொருள் உடலில் சுரக்கிறது. இந்த எண்டார்பின் மனநிலையை மகிழ்ச்சியாக்கக்கூடியது. எண்டார்பின் சுரப்பதால் உடலும் மனமும் ஆரோக்கியமாகின்றன. உடற்பயிற்சி செய்வதால் இதயநோய் வரும் வாய்ப்பும் குறையும்.

புகைக்கு நோ: புகைபிடிப்பவர்களுக்கு இதயநோய் வருவதற்கு மற்றவர்களைக் காட்டிலும் இரண்டு முதல் நான்கு மடங்கு வாய்ப்பு அதிகம். இதயத்திற்கான இரத்த குழாய்களில் கொழுப்பு காறைபோன்று படிவதற்கு புகைபிடித்தல் காரணமாகிறது. கொழுப்பு படிவதால் இதயம் முன்புபோல் எளிதாக இயங்க இயலாது. புகைபிடிக்கும் பழத்தை விட்டொழித்தால் நுரையீரலுக்கும் இதயத்திற்கும் மிக நல்லது.

அரிசி: சொல்லப்படுவதெல்லாம் உண்மையா?

Advertisement
மேலும் செய்திகள்
how-to-check-oxygen-concentration-if-doubted-as-covid-19-infected-and-ways-to-fight-with-covid-19
கோவிட்-19: ஆக்ஸிஜன் அளவை சோதிப்பது எப்படி?
what-are-the-benefits-in-adding-ghee-in-rice
தினமும் சாப்பாட்டில் நெய் கலந்து கொள்வதால் என்ன நன்மைகள்? வாங்க பார்க்கலாம்..
foods-that-help-to-boost-immunity-to-fight-against-infections-and-cold-full-of-vitamin-c
கொரோனா பரவல்: இயற்கையாக நோய் எதிர்ப்பு ஆற்றலை தரும் உணவுகள்
penugreek-tea-to-keep-lung-healthy-and-to-help-fight-against-infection-in-pandemic-season
கொரோனா காலம்: நுரையீரலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை டீ
herbs-that-help-to-shed-kilos-and-reduce-waist-cicumference-their-medicinal-benefits-and-methods-to-take-them
கொரோனா ஊரடங்கு: இடுப்புச் சதை குறைய எதை சாப்பிடலாம்?
tricks-make-sure-to-beat-the-heat-with-fennel-vetiver-and-sandalwood-paste
கோடைக்காலத்தில் சரும பாதுகாப்புக்கான இயற்கை முறைகள்
women-can-get-corona-vaccines-even-during-menstruation
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போடலாமா..? கூடாதா…?
improving-immune-health-help-to-activate-over-300-enzymes-and-aid-to-cell-division-cell-growth
இரத்த ஓட்டத்தை சீராக்கும்... நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்
the-lentil-that-manage-symptoms-of-diabetes-helping-for-weight-loss-could-prevent-from-heat-stroke-and-beneficial-for-pregnant-women
ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து பாதுகாக்கும்... சிசுவுக்கு நல்லது...
steaming-for-coron-treatment-what-are-the-things-you-should-not-forget
கொரோனா: நீராவி பிடிப்பது எவ்விதம் பயன் தரும்?
/body>