எலும்புக்கு பலம் தரும் உணவு பொருள்கள்

by SAM ASIR, Jun 12, 2019, 13:53 PM IST

எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு கால்சியம் என்னும் சுண்ணாம்பு சத்து தேவை. எலும்புகள் உறுதியாக இருப்பதற்கு மட்டுமல்ல, நம் நரம்புகள் மற்றும் தசைகள் நன்றாக செயல்படவும் கால்சியம் உதவுகிறது. நம் உடலுக்கு தினசரி 1 முதல் 1.3 கிராம் கால்சியம் தேவை.

தினசரி தேவையான சுண்ணாம்பு சத்தினை மோர் - 2 கப், கொஞ்சம் TOFU என்னும் சோயாகட்டி, கீரை, பீன்ஸ் - 1 கப், பழச்சாறு - 1 கப் சாப்பிடுவதன் மூலமே பெற்றுக்கொள்ள முடியும். இது தவிர கால்சியம் சத்து அதிகம் உள்ள சில உணவு பொருள்களை பார்க்கலாம்.

பால்:

கால்சியம் சத்து மிக அதிகம் உள்ள உணவு பொருள்களில் பாலும் ஒன்று. 1 கப் பாலில் 280 மில்லி கிராம் கால்சியம் சத்து காணப்படுகிறது. சிறுவர்களுக்கு எலும்புகள் பலப்பட பால் கொடுக்கலாம். பெரியவர்களும் அருந்தலாம்.

ஆரஞ்சு:

ஆரஞ்சு பழம் நமக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலை அளிக்கும் என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஆரஞ்சு பழத்தில் சுண்ணாம்பு சத்து மட்டுமல்ல, வைட்டமின் 'டி'யும் அதிக அளவு உள்ளது. வைட்டமின் 'டி' சத்து, கால்சியம் நம் உடலில் சேர்வதற்கு உதவி செய்கிறது. சாதாரணமாக ஒரு ஆரஞ்சு பழத்தில் 60 மில்லி கிராம் கால்சியம் உள்ளது.

நண்டு:

நண்டில் அதிக அளவு கால்சிய சத்து உள்ளது. 100 கிராம் நண்டில் 1600 மில்லி கிராம் கால்சியம் காணப்படுகிறது. நண்டு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். நண்டு பிரியர்கள் தாராளமாக சாப்பிடலாம்.

ராகி:

தானியங்களில் கால்சியம் அதிகம் கொண்டது ராகி ஆகும். 100 கிராம் ராகியில் 380 மில்லி கிராம் சுண்ணாம்பு சத்து உள்ளது. ஆகவே, ராகி கஞ்சி, ராகி தோசை, ராகி வெல்ல உருண்டை என்று விதம்விதமாக செய்து சாப்பிடலாம்.

வாதுமை பருப்பு:

வறுத்த வாதுமை பருப்பு ஒரு கப் சாப்பிட்டால் உடலில் 457 மில்லி கிராம் கால்சியம் சேரும். சுண்ணாம்பு சத்து மட்டுமல்ல புரோட்டீன் என்ற புரதமும் இதில் அதிகம் உள்ளது. இதய நோயை தடுக்கும் இயல்பு கொண்டது. புரதச் சத்து அதிகம் கொண்ட இந்த பருப்புகளில் சிலவற்றை காலை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.

அத்திப் பழம்:

அத்தி, உலராத சீமை அத்தி ஆகிய பழங்களில் கால்சியம் அதிக அளவு உள்ளது. ஓர் அத்திப்பழத்தில் 170 கிராம் சுண்ணாம்பு சத்து உள்ளது.

இவை தவிர வாழை, கொய்யா ஆகிய பழங்களிலும் வெந்தய கீரை, வெந்தய தாள், காலிஃபிளவர், முருங்கை, கொத்தமல்லி, முள்ளங்கிக்கீரை, கேரட், வெண்டை, சர்க்கரைவள்ளிக்கிழங்கு ஆகியவற்றிலும் கால்சியம் அதிகம் காணப்படுகிறது.

You may like:-

கால்சியம் குறைபாடா..? இவற்றை தினமும் சாப்பிடுங்க..

உடலில் கால்சியம் குறைந்துவிட்டால் எலும்புகள் வலுவிழந்துவிடும். இதனால் உட்காரமுடியாது, நிற்கமுடியாது, நடக்கமுடியாது. இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொருந்தும் என்றாலும், குழந்தை பிறப்புக்கு பிறகு அவர்களுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைப்பதில்லை. Read https://tamil.thesubeditor.com/news/health/3049-calcium-deficiency.html

அன்றாடம் சாப்பிட வேண்டிய ஐந்து பொருள்கள்

சமச்சீர் உணவு எல்லோரும் எந்நாளும் சாப்பிட முடிவதில்லை. 'சாப்பாட்டில் என்ன இருக்கிறது?' என்று எதையாவது அவசர அவசரமாக அள்ளிப் போட்டுக்கொண்டு ஓடிக்கொண்டே இருக்கின்றனர் பலர். நம் வாழ்க்கை முறை, அலுவலகம் மற்றும் தொழிற்சாலை பணி நேரங்கள் இப்படிப்பட்ட கட்டாயத்திற்குள் நம்மை தள்ளிவிட்டிருக்கின்றன. https://tamil.thesubeditor.com/news/health/15749-things-to-be-added-every-day-in-diet.html

எப்போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும் தெரியுமா?

மனித உடலில் 60 விழுக்காடு நீரால் ஆனது. உடல் செல்கள் அனைத்தும் நீரைக் கொண்டே கட்டமைக்கப்பட்டுள்ளன. நாம் உயிர் வாழ்வதற்கு நீர் அவசியம். உடலின் மூட்டுகளில் நீர் உயவுப் பொருளாக பயன்படுகிறது. உடலெங்கும் உயிர்வளியான ஆக்ஸிஜனை எடுத்துச் செல்கிறது. உடலின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகிறது. உணவு செரிப்பதில் உதவுகிறது. உடலிலிருந்து நச்சுப்பொருள்களை அகற்றுகிறது. https://tamil.thesubeditor.com/news/health/15637-when-do-you-drink-water.html

இளமை மாறாமலிருக்க இவற்றை சாப்பிடுங்க!

'மனசுல இளமையாதான் இருக்கேன்' என்று கூறினாலும் தோற்றத்தை இளமையாக காட்ட பலர் முயற்சி செய்வர். வயதாகும்போது உடல் செல்களும் முதிர்வடைகின்றன. இது மீட்சியடையாத நிலை என்பதால் உடல் முதுமை தோற்றம் பெறுகிறது. இளமையாக காட்சியளிக்க எத்தனை எத்தனையோ செயற்கை அழகு பொருள்களை மக்கள் பயன்படுத்துகின்றனர். https://tamil.thesubeditor.com/news/health/15565-anti-ageing-foods.html

ஒருநாளில் எத்தனை முறை சாப்பிடுவது நல்லது?

'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' இது காலங்காலமாக சொல்லப்பட்டு வரும் பழமொழி என்றாலும் இன்றும் அர்த்தமுடையதாகவே இருக்கிறது. மூன்றுவேளை உணவு என்பது நடைமுறையில் இருக்கும் வழக்கம். காலை சிற்றுண்டி, மதிய உணவு, இரவு உணவு என்று இவற்றை நாம் பிரித்திருக்கிறோம். https://tamil.thesubeditor.com/news/health/15295-small-meals-in-a-smart-way.html

முதுகெலும்பின்மேல் அக்கறையா? இவற்றில் கவனமாயிருங்கள்!

வாழ்க்கைமுறை மாற்றத்தால், நாம் வீட்டில் செய்யும் சில செயல்களே உடற்பயிற்சியாகவும் அமைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வீட்டுவேலைகளை உரிய கவனத்துடன் செய்தால், அவை உடலுக்கு நன்மை செய்யும்; அதேவேளையில் கவனக்குறைவால், தவறான முறையில் வேலைகளை செய்தால் உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அன்றாடம் செய்யும் இந்த வேலைகளை சரியாக செய்கிறீர்களா என்று ஆராய்ந்து பாருங்கள். https://tamil.thesubeditor.com/news/health/15050-spine-health-8-everyday-activities-that-are-actually-harming.html

காலையுணவுக்கு ஏற்ற கார்போஹைடிரேட் உணவு பொருள்கள்

உடல் பருமனாவதற்கு கார்போஹைடிரேட் மேல் பழி போடுவது வழக்கமான ஒன்றாகி விட்டது. சுத்திகரிக்கப்பட்ட தானியங்களையும், சர்க்கரையையும் பயன்படுத்தி செய்யப்படும் நொறுக்குத் தீனிகளே உடல் பருமனாவதற்கு காரணம் https://tamil.thesubeditor.com/news/health/14925-top-5-carb-rich-foods-for-breakfast.html

பிஸி லைஃப்பில் ஃபிட்னஸ்ஸை தக்க வைப்பது எப்படி?

'உடல் ஆரோக்கியத்திற்காக என்ன செய்கிறீர்கள்?' என்று கேட்டால், 'அதுக்கெல்லாம் எங்கே நேரமிருக்கு?' என்பதே பெரும்பாலும் அனைவரின் பதிலாக இருக்கிறது. யாருக்கும் உடற்பயிற்சி செய்யவோ, உணவில் கவனம் செலுத்தி சாப்பிடவோ நேரமிருப்பதில்லை. https://tamil.thesubeditor.com/news/health/14446-tips-for-healthy-living-busy-schedule.html


Speed News

 • சமயத் தலைவர்களுடன் 

  தலைமை செயலர் ஆலோசனை

  கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், வரும் 6ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களை திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இது தொடர்பாக முடிவெடுப்பதற்காக இன்று மாலை 4.45 மணியவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் பல்வேறு சமயத் தலைவர்களுடன் இன்று மாலை நடக்கும் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தவுள்ளார். 

  Jun 3, 2020, 14:46 PM IST
 • சென்னை ராயபுரத்தில் 
  3 ஆயிரம் பேருக்கு கொரோனா
   
  சென்னையில் இது வரை 16,585 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. குறிப்பாக, ராயபுரம் மண்டலத்தில்  3,060 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற மண்டலங்களில் பாதிப்பு வருமாறு:   கோடம்பாக்கம் - 1,921, தண்டையார்பேட்டை -  2,007, திரு.வி.க.நகர் -  1,711, தேனாம்பேட்டை - 1,871, அண்ணாநகர் - 1,411, வளசரவாக்கம் -  910, அடையாறு - 949, அம்பத்தூர் - 619, திருவொற்றியூர் - 559, மாதவரம் - 400, மணலி - 228, பெருங்குடி - 278
  ஆலந்தூர் - 243, சோழிங்கநல்லூர் - 279
   

   
  Jun 3, 2020, 14:42 PM IST
 • டெல்லி அரசில் சம்பளம்

  போட பணம் இல்லை..

  டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று அளித்த பேட்டியில், ‘‘டெல்லி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடவும், சாதாரணச் செலவுகளுக்கும் மாதம் ரூ.3500 கோடி தேவை. ஆனால், கடந்த 2 மாதங்களாக ஜி.எஸ்.டி வசூல் தலா ரூ.500 கோடி அளவில்தான் உள்ளது. மற்ற வழிகளிலும் ரூ.1735 கோடி வருவாய் மட்டுமே கிடைத்துள்ளது. எனவே, மத்திய அரசாங்கம் டெல்லி அரசுக்கு உடனடியாக ரூ.5 ஆயிரம் கோடி நிதி அளிக்க வேண்டும்’’ என்றார். 

  May 31, 2020, 14:10 PM IST
 • தொழிலாளர்களுக்கு எவ்வளவு

  கொடுத்தீர்கள்.. கபில்சிபல் கேள்வி

   

  காங்கிரஸ் மூத்த தலைவர் கபி்ல் சிபில், பிரதமர் மோடிக்கு ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறுகையில், ‘‘பி.எம். கேர் நிதியில் இருந்து இது வரை எத்தனை தொழிலாளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தீ்ர்கள்? இந்த ஊரடங்கு காலத்தில் பல தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். சிலர் ரயிலில் இறந்து்ள்ளார்கள். சில நடக்கும் போது இறந்துள்ளார்கள். சிலர் பசியால் மடிந்துள்ளார்கள். நீங்கள் எவ்வளவு தொகை கொடுத்தீ்ர்கள் என்று பதில் கூற வேண்டும்’’ என்றார்

  May 31, 2020, 14:07 PM IST
 • தெருவுக்கு வாங்கய்யா..

  யஷ்வந்த் சின்கா ட்விட்

  முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா இன்று ஒரு ட்விட் பதிவிட்டுள்ளார். அதில், ‘‘ஏழைகளின் துயரங்களை கவனிக்காமல், மத்திய அரசு கண்களையும், காதுகளையும் மூடிக் கொண்டிருக்கும் போது, எதிர்க்கட்சிகள் வெறும் மனுக்களை கொடுத்து கொண்டிருப்பது சரியா? இதற்கு மேலும் வெறும் அறிக்கைகள் எதுவும் பலனளிக்காது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் தெருவுக்கு வந்து போராட வேண்டும்’’ என்று கூறியுள்ளார். 

  May 23, 2020, 14:18 PM IST