சாப்பிடுபவை சரியாக செரிமானம் ஆகவில்லையா? இவையெல்லாம் உதவும்!

சாப்பிடும் உணவு பொருள்கள் சரியாக செரிமானம் ஆகவில்லையென்றால், வயிறு உப்பிக்கொண்டதுபோன்ற, நெஞ்சு எரிவதுபோன்ற உணர்ச்சி தோன்றும். பலருக்கு ஏப்பம் வந்து கொண்டே இருக்கும். வாயிலிருந்து, உணவுக்குழல், இரைப்பை, சிறுகுடல் வழியாக உணவு பயணித்து, உடலுக்குத் தேவையான சத்துகளை அளித்து, பெருங்குடல் மூலம் கழிவாக வெளியேறும் வரைக்கும் அத்தனை செயல்பாடுகளும் தடையின்றி நடக்கவேண்டும்.

"இதெல்லாம் எங்கே நடக்குதுங்க?" என்று அங்கலாய்க்கிறீர்களா? இதோ, இவற்றை சாப்பிட்டுப் பாருங்கள்; செரிமான பிரச்னை கண்டிப்பாக தீர்ந்து விடும்.

வாழைப்பழம்: உணவு செரித்து, கழிவு வெளியேறுவதற்கு வாழைப்பழம் நன்கு உதவி செய்யும். உணவு கழிவுகளை ஒன்றாக திரட்டி, மலம் வெளியேற வாழைப்பழம் உதவுகிறது. உடலுக்குத் தேவையான எலக்ட்ரோலைட் என்னும் சத்துகளை திரும்ப அளிப்பதோடு அவற்றுள் பொட்டாசியம் வயிற்றில் சமநிலையில் பேணப்படவும் வாழைப்பழம் உதவும்.

ஓட்ஸ்: நார்ச்சத்து அதிகமாக காணப்படும் உணவு பொருள்களுள் ஒன்று ஓட்ஸ். இது குறைவான கலோரி (ஆற்றல்) கொண்டது. பாஸ்பரஸ், வைட்டமின் இ மற்றும் துத்தநாகம் ஆகியவை ஓட்ஸில் அதிகம் காணப்படுகின்றன. செரிமான மண்டலம் நன்கு செயல்பட்டு கழிவு வெளியேற ஓட்ஸ் உதவுகிறது.

தயிர்: வயிற்று கோளாறை குணப்படுத்த தயிர் காலங்காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வயிற்றினுள் நன்மை தரும் பாக்டீரியாக்களை கொண்டு வரும் புரோபியோடிக் நுண்ணுயிரிகள் தயிரில் காணப்படுகின்றன. ஆகவே, தயிர் செரித்தலை ஊக்குவிக்கிறது.

தேங்காயெண்ணெய்: வெண்ணெய் மற்றும் வேறு சமையல் எண்ணெய்களுக்கு சரியான மாற்று தேங்காயெண்ணெயாகும். தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளுக்கு எதிராக செயல்படும் பண்பு தேங்காயெண்ணெய்க்கு உண்டு. இதிலுள்ள கொழுப்பு அமிலங்கள் செரிமானத்தை எளிதாக்கும். நோயெதிர்ப்பு ஆற்றலை அளிப்பதோடு உடல்திறனை மேம்படுத்தவும் செய்யும்.

பயறு வகைகள்: வயிற்றிலுள்ள தீமை தரும் நுண்ணுயிரிகளை செயல்படுவதை தடுத்து, நன்மை தரும் நுண்ணுயிரிகளை வளர்க்கும் பண்பு பயறுகளுக்கு உண்டு. இதன் மூலம் வயிற்றில் தொற்று ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. பயறுகளில் நார்ச்சத்தும் காணப்படுகிறது.

இஞ்சி: செரிமானத்தை ஊக்குவிப்பதில் இஞ்சிக்கு முதலிடம் உண்டு. வயிறு உப்பிசம், வாந்தி வருவது போன்ற உணர்வு, வயிற்றுப்போக்கு இவற்றை குணமாக்கும் இயல்பு இஞ்சிக்கு உண்டு. வயிற்றிலிருந்து சிறுகுடலுக்கும் சீக்கிரமாக உணவு கடத்தப்பட இஞ்சி உதவுகிறது.

காய்கறிகள்: காய்கறிகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. பீட்ரூட், மலச்சிக்கலை தீர்க்கும். சர்க்கரைவள்ளிக்கிழங்கு வயிற்றுப் புண் மற்றும் குடல் பிரச்னைகளை குணப்படுத்தும். வெள்ளரி, தக்காளி மற்றும் கேரட் ஆகியவை செரிமானத்திற்கு உதவும்.

சிவப்பரிசி: சரிவிகித உணவில் கார்போஹைடிரேட் என்னும் மாவுச்சத்து அவசியம் இருக்கவேண்டும். சிவப்பரிசியில் அதிக கலோரியும் குறைந்த அளவு கொழுப்பும் உள்ளது. உணவு, செரிமான மண்டலத்தில் எளிதாக பயணம் செய்வதற்கு சிவப்பரிசி உதவுகிறது. ஆகவே, செரிமானம் சீராக நடக்கிறது.

மிளகுக்கீரை: புதினா குடும்பத்தை சேர்ந்த 'பெப்பர்மிண்ட்' என்னும் மிளகுக்கீரை செரிமானத்தை எளிதாக்கும். வயிற்றுப் பிரச்னைகளை நீக்கும். இது நறுமணமிக்கதால் சாலட், பழங்களுடன் இணைத்து சாப்பிடலாம்.

நீர்: போதுமான நீர் அருந்தாததும் மலச்சிக்கல் ஏற்பட காரணமாகலாம். தினமும் எட்டு முதல் பத்து குவளை (தம்ளர்) நீர் அருந்தவேண்டும். நீர் அதிகமாக அருந்தினால் செரிமானமும் நன்றாக நடக்கும்.

அசத்தும் அழகு பெற எளிய வழிகள்

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS
Advertisement
மேலும் செய்திகள்
What-you-can-eat-before-going-to-gym-in-the-morning
காலை உடற்பயிற்சி முன் எவற்றை சாப்பிடலாம்?
Monsoon-food-for-kids
மழையில் ஆட்டம் போடும் குட்டீஸூக்கு என்ன கொடுக்கலாம்?
How-to-lower-your-Cholesterol-level
இப்படி செய்தால் போதும்; கொலஸ்ட்ரால் குறைஞ்சுபோகும்!
Things-to-be-added-every-day-in-diet
அன்றாடம் சாப்பிட வேண்டிய ஐந்து பொருள்கள்
Signs-that-reveal-you-are-stressed
மன அழுத்தம், நன்மையா? தீமையா?
Benefits-of-Flavonoid-rich-Danish-diet
மது மற்றும் புகை பழக்கமுள்ளவரா? இதோ ஒரு நற்செய்தி
How-to-reduce-excess-fat-at-the-side-of-waistline
இடுப்புச் சதை குறைய என்ன செய்யலாம்?
Is-there-any-difference-between-yogurt-and-curd
யோகர்ட் - தயிர்: இரண்டுக்கும் என்ன வேறுபாடு?
When-do-you-drink-water
எப்போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும் தெரியுமா?
How-to-overcome-depression
மனம் கைவசம்; உலகம் உங்கள் வசம்!
Tag Clouds