அசைவ பிரியர்களே உங்களுக்கான நற்செய்தி!!ஈரல் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!

benefits of eating eeral

by Logeswari, Sep 21, 2020, 20:06 PM IST

இவ்வுலகில் சைவத்தை விட அசைவத்தை விரும்புபவர்கள் தான் அதிகம்.சைவத்தில் வெறும் சாம்பார்,காரக்குழம்பு மட்டும் தான் ஆனால் அசைவ சாப்பாட்டில் அதிக வகைகள் இடம்பெறும்..எத்தனை உள்ளது என்பதை எண்ண பத்து விரல்கள் போதாது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அசைவ உணவை விரும்பி உண்பார்கள்.அதிலும் ஈரலை பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது.சிலர் ஈரலை குழம்பு வைத்து சாப்பிடுவார்கள்.மற்ற சிலர் ஈரலை ஃபரை செய்து உண்பார்கள்.இன்னும் ஈரலில் நிறைய வகைகளை செய்யலாம்.சரி வாங்க ஈரலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள் உள்ளது என்பதை பார்க்கலாம்....

ஈரல் சாப்பிடுவதால் உடலுக்கு பல விதமான நன்மைகள் உள்ளது.அதுவும் முக்கியமாக ஈரல் உண்டால் கண் பார்வை மேம்படும். ஈரலில் வைட்டமின் ஏ உள்ளதால் கண் பார்வை நன்றாக தெரியும். முதிர்ந்தவர்களுக்கு கண் பார்வை தெளிவாக இருக்காது ஆதாலால் அவர்களும் ஈரலை சாப்பிட்டால் கண் நன்றாக தெரியும்.

வாரத்தில் மூன்று முறை ஈரல் சாப்பிட்டால் உடலில் இரத்த அளவை சீர் செய்கிறது. உடம்பில் இரும்பு சத்து அதிகமாவதால் ஹீமோகுளோபின் அளவையும் சீர் செய்கிறது. இரத்த சோகையால் அவதிபடுபவர்கள் ஈரலை சாப்பிட்டு வரலாம்.

ஈரலில் வைட்டமின் ஈ சத்து உள்ளதால் உடல் ஆரோக்கியம் அடையும்.உடல் நன்றாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு வைட்டமின் ஈ அவசியம்.அதனால் வைட்டமின் ஈ சத்தை தூண்டும் ஈரலை சாப்பிட பழகி கொள்ளுங்கள்..

அசைவத்தில் ஏராளமான சத்துக்கள் உள்ளது.இதனை எப்படி சாப்பிட்டால் உடலுக்கு நன்மை என்பதை ஆராந்து சாப்பிடுங்கள்...

More Health News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை