ஆக்டிவ் ஆக இருக்கிறீர்களா? அதை எப்படி கண்டுபிடிக்கலாம் தெரியுமா?

Are you active? Do you know how to find it?

by SAM ASIR, Sep 26, 2020, 14:38 PM IST

"நான் ஆக்டிவ் ஆகத்தான் இருக்கிறேனா?" என்ற கேள்வி பல நேரங்களில் நமக்குள் எழும்பலாம். 'நிறைய வேலை', 'ஒரே அலைச்சல்' என்றெல்லாம் கூறலாம். ஆனால் உடல்ரீதியாக நாம் செயலூக்கம் உள்ளவர்களாக இருக்கிறோமா என்பதை அளவிட ஒரு முறை உள்ளது.ஆரோக்கியம், உடல் எடை குறைப்பு என்பவற்றைக் குறித்து அதிகம் பேசப்பட்டாலும் முழு அக்கறையுடன் அதற்காக முயற்சியெடுப்போர் சிலரே. உடலை செயலூக்கம் மிக்கதாக, உழைப்பதற்கு ஏற்றதாகப் பேணுவதற்கு உடற்பயிற்சிக் கூடத்திற்கு (ஜிம்) சென்றுதான் ஆகவேண்டும் என்ற கட்டாயமில்லை. அன்றாடம் நாம் எவ்வளவு நடக்கிறோம் என்பதைக் கணக்கிட்டால் அதன் அடிப்படையில் நம் உடல் தகுதியைக் கண்டுகொள்ளலாம்.

சிலர் தினமும் 10 அல்லது 15 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வர். இன்னொரு முறையாகத் தினமும் 10,000 முறை அடியெடுத்து வைத்து நடப்பதும் பரவலாக கடைப்பிடிக்கப்படுகிறது.தினந்தோறும் 10,000 அடிகளை எடுத்து வைத்து நடப்பது வாரத்திற்கு 150 நிமிடங்கள், அதாவது இரண்டரை மணி நேரம் தீவிர உடற்பயிற்சி செய்வதற்கான பயனை உடலுக்கு அளிக்கிறது.

தினமும் 10,000 அடிகள் எடுத்து வைப்பது நடப்பது ஆரோக்கியமான பெரியவர்களுக்குச் சரியான இலக்கு என்று ஆய்வுகள் கூறுகின்றன. நாளொன்றுக்கு 5,000 முறை அடியெடுத்து வைப்பவர்கள் துடிப்பில்லாதவர்கள் என்ற வகையில் அடங்குவர். 7,500 முதல் 9,999 வரையிலான எண்ணிக்கையில் அடியெடுத்து வைப்பவர்கள் சராசரி வகையிலும் 12,500 முறை அடியெடுத்து வைப்பவர்கள் மிகவும் துடிப்பானவர்கள் என்றும் வகைப்படுத்தப்படுகின்றனர்.

10,000 முறையென்பது உடல் நல்ல தகுதியுடன் இருப்பதற்கான அடிப்படைத் தேவை என்றும் ஆரோக்கிய ஆலோசகர்கள் கூறுகின்றனர். நீண்ட நேரம் அமர்ந்திருந்து வேலை பார்ப்பது வளர்சிதை மாற்றம் தொடர்பான உடல் நலக் குறைபாடுகளுக்கு வழிவகுக்கும். 10,000 முறை அடியெடுத்து வைப்பது உடலிலுள்ள கொழுப்பைக் கரைக்க உதவாவிட்டாலும், ஒட்டுமொத்த உடல் எடையைப் பராமரிக்க உதவும்.

10,000 முறை அடியெடுத்து வைக்கிறேன் என்பதை எப்படி கணக்குப் பார்ப்பது என்று திகைக்கவேண்டாம். இப்போது வரும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் நாம் நடப்பதை அளவிடுவதற்கான வசதி உள்ளன.

உங்களால் முதலாவது 5,000 முறைதான் அடியெடுத்து வைக்க முடிகிறது என்றால் மனந்தளர்ந்து போகவேண்டாம். தினமும் 250 முதல் 500 அடிகள் வரை கூடுதலாக எடுத்து வைக்கப் பயிற்சி செய்யவும். அப்படிக் கூடுதலாக நடப்பதற்குத் தொடர்ந்து முயற்சித்தால் சில வாரங்களில் 10,000 முறை அடியெடுத்து வைத்தல் என்ற இலக்கினை எட்டிவிட முடியும். இரண்டு நிமிடங்கள் ஓடுவது பிறகு ஒரு நிமிடம் நடப்பது என்று மாற்றி மாற்றிச் செய்தாலும் அதிக அடிகளை எடுத்து வைக்க முடியும்.

இதைத் தொடர்ந்து கடைப்பிடித்தால் நோயற்ற வாழ்வு வாழலாம்.

You'r reading ஆக்டிவ் ஆக இருக்கிறீர்களா? அதை எப்படி கண்டுபிடிக்கலாம் தெரியுமா? Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை