எஸ்பிபிக்காக இசைஞானி இளையராஜா அர்ப்பணித்த உருக்கமான அஞ்சலி பாடல்.. காற்று மண்டலத்தில் வசித்தாலும் காணும் வரம் கிடைக்குமா..??

Music Director Ilayaraja Song Dedication to SPB

by Chandru, Sep 26, 2020, 12:35 PM IST

இசை அமைப்பாளர் இளையராஜா . பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நட்பு என்பது அன்னக்கிளி முதல் படத்துக்கு இளையராஜா இசை அமைப்பதற்கு முன்பே மேடைகளில் தொடங்கியது. இளையராஜாவின் இசை மேடைகளில் எஸ்பி.பாலசுப்ரமணியம் பாடி இருக்கிறார். அன்னக்கிளி படத்தில் அவர் பாடிய பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது.
எஸ்பி.பாலசுப்ரமணியம் நேற்று மரணம் அடைந்ததையறிந்து இளைய ராஜா கண்ணீர் மல்க அஞ்சலி வீடியோ வெளியிட்டார். இன்று எஸ்பிபிக்காக இளையராஜா இறுதி அஞ்சலி பாடல் பாடி உள்ளார். அந்த ஆடியோ தற்போது நெட்டில் வைரலாகி வருகிறது.

கானம் பாடிய
வானம் பாடியே..
உன் கீதம் இன்றியே..
மவுனம் ஆனதோ!
உன் ராக ஆயுள் இன்று அமைதி ஆனதோ அமைதி ஆனதோ..
பாடி பாடியே அன்பை வளர்த்தாய்
போற்றி போற்றியே தெய்வத்தைத் துதித்தாய்..
இசை எனும் வானில் திசையை அளந்தாய்
இன்னுயிர் யாவையுமே பாடியே தீர்த்தாய்..
காலம் கடந்து உந்தன் உயிரின் ஓசை காற்று மண்டலத்தில் வசித்தாலும் கண்ணெதிரே உனை காணும் வரம் கிடைக்குமா..
மீண்டும் வரம் கிடைக்குமா..
அஞ்சலி.. அஞ்சலி..
பாடும் நிலவுக்கு மவுன அஞ்சலி..
அஞ்சலி.. அஞ்சலி..
பாடும் நிலவுக்கு மவுன அஞ்சலி..

இவ்வாறு அந்த பாடலை இளைய ராஜாவே எழுதிப் பாடி உள்ளார்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை