மம்தா நடத்தும் எதிர்க்கட்சிகளின் மெகா மாநாட்டில் வாஜ்பாய் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த முன்னாள் அமைச்சர்கள் யஷ்வந்த் சின்கா, நடிகர் சத்ருகன் சின்கா, அருண்ஷோரி உள்ளிட்டோரும் பங்கேற்று பா.ஜ.க.வுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளனர்.
மம்தா நடத்தும் இம்மாநாட்டில் நாட்டின் பெரும்பாலான எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்னுள்ளனர். குஜராத் பட்டேல் இனத் தலைவர் ஹர்த்திக் படேல், சுயேட்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி, ஜார்க்கன்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் உள்ளிட்ட சிறு கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.
இவர்களுடன் பா.ஜ.க. அதிருப்தி தலைவர்களான யஷ்வந்த் சின்கா, சத்ருகன் சின்கா, அருண்ஷோரி, அருணாச்சல பிரதேச பா.ஜ.க.முன்னாள் முதல்வர் ஜெகாங் அபாங் உள்ளிட்ட பிரபலங்களும் பங்கேற்று பா.ஜ.கவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளனர்.